தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 04 ம் தேதி, சனிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், மார்கழி 20 ம் தேதி சனிக்கிழமை
அதிகாலை 01.09 வரை சதுர்த்தி, பிறகு இரவு 11.16 வரை பஞ்சமி, அதற்கு பிறகு சஷ்டி. அதிகாலை 12.04 வரை அவிட்டம், பிறகு இரவு 10.51 வரை சதயம், அதற்கு பிறகு பூரட்டாதி நட்சத்திரம் உள்ளது. காலை 06.30 வரை சித்தயோகம், பிறகு இரவு 10.51 வரை அமிர்தயோகம், பிறகு மரணயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 12.30 முதல் 01.30 வரை; மாலை 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
சந்திராஷ்டமம் - புனர்பூசம், பூசம், ஆயில்யம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - எதிலும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையுடன் செயல்பட வேண்டும். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். தொழில் தொடர்பான பயணங்கள் ஏற்படலாம். பொருளாதாரம் நன்றாக இருக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு நம்பிக்கையை தரும்.
ரிஷபம் - எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். தொழிலுக்காக உறவினர்களிடம் பணம் வாங்க வேண்டி இருக்கலாம். குடும்ப நிலை உயரும். நம்பிக்கை, வேகம் அதிகரிக்கும். அன்புக்குரியவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
மிதுனம் - சாதனை நிறைந்த ஆளாக இருக்கும். இடமாற்றத்துடன் வேலைவாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். வருமானத்திற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
கடகம் - சாதகமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் நம்பிக்கை குறையலாம். மனதில் குழப்பங்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம் - மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்துடன் ஆன்மிக தலங்களுக்கு சென்று வரலாம். நம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஆதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். முன்னேற்றப் பாதைகள் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும்.
கன்னி - பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோக மாற்றத்துடன் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். இருந்தாலும் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள். வாழ்க்கை துணையுடன் மோதல்களை தவிர்க்க வேண்டும்.
துலாம் - ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். பொருளாதாரம் கவலை அளிக்கலாம். கோவில் விழாக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தினரின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். வியாபாரிகளுக்கு சுமாரான நாளாக இருக்கும்.
விருச்சிகம் - வெளியூர் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கலாம். பழைய நண்பரை சந்திக்கலாம். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் வருமானம் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் ஏற்படும். வியாபாரத்திலும் வளர்ச்சி ஏற்படும்.
தனுசு - உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆனால் மறைமுக எதிர்ப்புகளை சந்திக்க நேரலாம். பணியிடத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். நம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பணவரவு அதிகரிக்கும்.
மகரம் - நாளை கலவையான பலன்கள் ஏற்படலாம். வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். கலை அல்லது இசைத்துறையில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலில் மாற்றம் ஏற்படலாம். நண்பர்களின் உதவியால் பண வரும் வாய்ப்புகள் கிடைக்கும். படபடப்பாக காணப்படுவீர்கள்.
கும்பம் - வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படும். வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் கடினமாக உழைத்தால் மட்டுமே பலன் கிடைக்கும். வருமானத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
மீனம் - இனம் புரியாத பயம் மனதில் குடிகொள்ளும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் உயர்வு அதிகரிக்கும். நிலம், வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் தடைகள் ஏற்படலாம். பெற்றோரின் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
{{comments.comment}}