12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 03, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Jan 03, 2025,09:20 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஜனவரி 03 ம் தேதி, வெள்ளிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், மார்கழி 19 ம் தேதி வெள்ளிக்கிழமை

வளர்பிறை சதுர்த்தி. அதிகாலை 02.44 வரை திரிதியை, பிறகு சதுர்த்தி. அதிகாலை 12.58 வரை திருவோணம், பிறகு அவிட்டம் நட்சத்திரம் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.  


நல்ல நேரம்: காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 12.30 முதல் 01.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை


சந்திராஷ்டமம் -  திருவாதிரை, புனர்பூசம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - நன்மைகள் நடக்கும் நாள். பேச்சில் இனிமை அதிகரிக்கும். தொழில் தொடர்பான வேலைகள் மனக்குழப்பத்தை ஏற்படுத்தலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.


ரிஷபம் - தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். தொழிலில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். வியாபாரத்தில் உயர்வு கூடும். வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் அமையும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.


மிதுனம் - குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும். நெருக்கமானவர்கள் வழியில் இன்ப அதிர்ச்சி வரலாம். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்க வாய்ப்புகள் கிடைக்கும். முதலீட்டு வாய்ப்புகள் அமையும்.


கடகம் - மனதில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். பெற்றோரின் உடல் நலனில் அக்கறை தேவை. செலவுகள் அதிகரிக்கலாம். வியாபாரிகளுக்கு புதிய மாற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையலாம்.


சிம்மம் - நன்மைகள் தரும் நாளாக இருக்கும். நண்பர்களுடன் வியாபார ரீதியாக பயணம் மேற்கொள்ளலாம். சுப காரிய பேச்சுக்கள் கைகூடும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அன்பானவர்களின் ஆதரவு ஆறுதலை தரும்.


கன்னி - வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். பூர்விக சொத்துக்கள் தேடி வரலாம். வருமானத்தை பெருக்குவதில் உங்களின் புத்திசாலித்தனமாக செயல்பாடுகள் வெற்றியை தரும்.


துலாம் - சுமாரன நாளாக இருக்கும். சில முக்கிய விஷயங்களில் வெற்றி கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த மற்றவர்களிடம் பணம் பெறலாம். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். 


விருச்சிகம் - பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.


தனுசு - நன்மைகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் நேரத்தை செலவிடுவீர்கள். மற்றவகளுடன் பேசும் போது கவனித்து பேச வேண்டும். பணியிடத்தில் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அன்பாவர்களின் சந்திப்பு நிகழலாம்.


மகரம் - வெற்றி நிறைந்த நாளாக இருக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் உயர்வு ஏற்படும். தொழில் விறுவிறுப்படையும். கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகள் வெற்றி அடையும்.


கும்பம் - சாதகமான விஷயங்கள் நடக்கும். வாழ்க்கை துணையின் உடல்நலனில் அக்கறை காட்டுங்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரும். இருந்தாலும் பண பரிவர்த்தனைகள் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள்.


மீனம் - செலவுகள் அதிகரிக்கும். எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சூழ்நிலையில் சாதகமாக இருக்காது. வாகன பயணத்தின் போது கவனம் அடசியம். அரசாங்க ஆதரவு கிடைக்கும். கல்வி சார்ந்த விஷயங்கள் தொடர்பாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சிந்து வெளிப் புதிர்.. விடை கண்டுபிடிப்போருக்கு.. 1 மில்லியன் டாலர் பரிசு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

இரவு சாப்பிட்ட பிறகு ஜீரண கோளாறு ஏற்படாமல் இருக்கணுமா?...இதை டிரை பண்ணி பாருங்க

news

அமெரிக்காவில் வேகமாக பரவும் இன்ஃபுளுயன்சா வைரஸ்.. வழக்கமாக குளிர் காலத்தில் பரவுவதுதானாம்!

news

சீனாவில் பரவும் வைரஸ்... இந்தியாவிற்கு பாதிப்பு வருமா?... மத்திய சுகாதாரத்துறை விளக்கம் இதுதான்!

news

டெல்லிக்கு மஞ்சள் அலர்ட்.. படுத்தி எடுக்கும் அடர் பனிமூட்டம்.. 400க்கும் அதிகமான விமான சேவை பாதிப்பு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

பொங்கல் பண்டிகைக்கு 6 நாட்கள் அரசு விடுமுறை... ஜனவரி 17ம் தேதி லீவு.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு

news

ஃபெங்கல் புயல் தீவிர பேரிடர்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு.. கெஜட்டிலும் அறிவிக்கை வெளியானது

news

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி: 4 லட்சம் நிவாரணம் அறிவித்த தமிழக அரசு

அதிகம் பார்க்கும் செய்திகள்