தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 03 ம் தேதி, திங்கட்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், தை 21 ம் தேதி திங்கட்கிழமை
வளர்பிறை சஷ்டி, சுபமுகூர்த்த நாள். காலை 10.12 வரை பஞ்சமி, பிறகு சஷ்டி. காலை 04.07 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும், பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.35 வரை அமிர்தயோகம், பிறகு சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 06.30 முதல் 07.30 வரை; மாலை - 5 முதல் 6 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
சந்திராஷ்டமம் - மகம், பூரம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - இறை வழிபாட்டின் மூலம் நன்மை காண வேண்டிய நாள். தொழில் நன்றாக இருக்கும். வாழ்க்கை துணையிடம் பேச்சுக்களில் எச்சரிக்கை அவசியம். பண விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டியது நல்லது.
ரிஷபம் - உங்களின் வெளிப்படை தன்மை மூலம் வளர்ச்சி காண வேண்டிய நாள். பொருளாதாரம், தொழில், ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நேர்மறையாக எதிலும் செயல்படுவதால் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் தோன்றும். வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஏற்படலாம்.
மிதுனம் - குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள். மன அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்ய வேண்டும். இத உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவும். உணவு பழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும். எதிலும் நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
கடகம் - இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டும். நேர்மறை சிந்தனைகள் மூலம் வளர்ச்சி காண வேண்டிய நாள். வாழ்க்கை துணையை அனுசரித்து செல்லுங்கள். குடும்பத்தில் அமைதியை காக்க வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடியுங்கள்.
சிம்மம் - பரபரப்பான நாளாக இருக்கும். கூடுதல் பொறுப்புக்களை ஏற்க வேண்டி இருக்கும். வியாபாரிகள் கூட்டுத்தொழிலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பண விஷயத்தில் யாரையும் நம்பி எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.
கன்னி - நன்மைகள் நிறைந்த நாளாக இருக்கும். வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்கலாம். வாழ்க்கை துணை உடனான அன்பு அதிகரிக்கும். அவரின் ஆதரவு மனதிற்கு புதிய தைரியத்தை கொடுக்கும்.
துலாம் - உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். மன அழுத்தத்திற்கு சிலர் ஆளாக நேரிடும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். வேலைச்சுமை அதிகரிக்கலாம். இருந்தாலும் தேவையான அளவிற்கு ஓய்வு எடுத்துக் கொள்வதும் அவசியம்.
விருச்சிகம் - நல்ல செய்திகள் தேடி வரும். பழைய நண்பரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான புதிய வாய்ப்புக்கள் ஏற்படும். உணவு பழக்கத்திலும், ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்துவது அவசியம்.
தனுசு - சிறப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வாழ்க்கை துணையுடனான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியம் தொடர்பாக எந்த விஷயத்தையும் தள்ளி போடுவதை தவிர்க்க வேண்டும்.
மகரம் - மங்களகரமான நாளாக இருக்கும். பல வழிகளிலும் பணம் வந்து சேரும். அரசியல்வாதிகள் கவனமுடன் இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவை எடுக்காமல் இருப்பது நல்லது. எதிலும் பொறுமையாகவும், எச்சரிக்கையாகவும் இருப்பது நல்லது.
கும்பம் - பயனுள்ள நாளாக இருக்கும். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுகள் தேடி வரலாம். வாழ்க்கை துணையிடம் கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
மீனம் - சுமாரான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக வேலை காரணமாக அழுத்தம் அதிகரிக்கலாம். தொழிலில் நல்ல செய்திகள் தேடி வர வாய்ப்புள்ளது. இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}