12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 03, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Apr 03, 2025,10:04 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 03 ம் தேதி, வியாழக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், பங்குனி 20ம் தேதி புதன்கிழமை

சஷ்டி. அதிகாலை 4 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. பகல் 12.32 வரை ரோகிணி நட்சத்திரம், பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரம் உள்ளது. காலை 06.10 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை - கிடையாது

கெளரி நல்ல நேரம் : காலை 12.30 முதல் 01.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை 

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


சந்திராஷ்டமம் -  சுவாதி, விசாகம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - கணவன்-மனைவி இடையே புரிதல் ஏற்படும். தள்ளிப் போன விஷயங்கள் சாதகமாக முடியும். இழுபறியான பண வரவுகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். மனதில் புதிய சிந்தனைகள் ஏற்படும்.


ரிஷபம் - உடல் ஆரோக்கியமும் தோற்ற பொலிவும் அதிகரிக்கும். மனதில் குழப்பம் ஏற்படுவதால் சில சங்கடங்கள் தோன்றும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்லவும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும். பிரச்சனைகளில் விவேகத்துடன் செயல்படவும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகளில் பொறுமை வேண்டும்.


மிதுனம் - சிறு சிறு பணிகளிலும் அலைச்சல் அதிகரிக்கும். வாகனத்தில் மிதமான வேகம் நல்லது. குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ற லாபம் கிடைக்கும்.அலுவலகத்தில் விமர்சன பேச்சுக்களை தவிர்க்கவும். எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். சுகம் நிறைந்த நாளாக இருக்கும்.


கடகம் - பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பெரிய மனிதர்களால் ஆதாயம் கிடைக்கும்.


சிம்மம் - சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். அரசு தொடர்பான காரியங்கள் இழுபறிக்கு பிறகு முடியும். உத்தியோகத்தில்  சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். தெளிவு பிறக்கும் நாளாக இருக்கும்.


கன்னி - குடும்பத்தில் ஆதரவு பெருகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மனதில் திருப்தியான சூழல் அமையும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். நல்ல நாள்.


துலாம் -  மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நெருக்கடியான சூழ்நிலை உருவாகும். குடும்பத்தினருடன் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் தொடர்பான புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும். நிலுவையில் இருந்த பணிகளை செய்த முடிப்பீர்கள். செலவுகளின் தன்மை அறிந்து செயல்படவும். ஆரோக்கியத்தில் சுமாராக இருக்கும்.


விருச்சிகம் - மனதில் புதிய சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் உதவிகள் சாதகமாகும். செயல்பாடுகளில் அனுபவம் அதிகரிக்கும். வாழ்க்கை துணை வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும்.


தனுசு - தொழில் துவங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நெருக்கமானவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் நல்ல செய்தி வரும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பயம் விலகும் நாள்.


மகரம் - உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கை துணையுடன் இருந்த வந்த மன வருத்தங்கள் நீங்கும். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அவசர முடிவுகளை தவிர்க்கவும்.


கும்பம் -  பேச்சுக்களில் பொறுமையை கடைபிடிக்கவும் தாய்வழி உறவுகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் தொடர்பான உறவிகள் கிடைக்கும். வரவுகளால் நிதி நெருக்கடி குறையும். பூர்வீக சொத்துக்களில் பொறுமை வேண்டும். உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும்.


மீனம் - விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். திடீர் பயணம் மூலம் மாற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஈர்ப்புகள் அதிகரிக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சாதனை நிறைந்த நாளாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்