தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 02 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், தை 20 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
சதுர்த்தி, சுபமுகூர்த்த நாள். பகல் 12.29 வரை சதுர்த்தி, பிறகு பஞ்சமி. காலை 05.21 வரை பூரட்டாதி நட்சத்திரமும், பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 05.21 வரை மரணயோகம், பிறகு காலை 06.35 வரை சித்தயோகம், பிறகு அமிர்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.30 முதல் 08.30 வரை; மாலை - 01.30 முதல் 02.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
சந்திராஷ்டமம் - ஆயில்யம், மகம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - மங்களகரமான நாளாக இருக்கும். சுப செலவுகள் ஏற்படலாம். வாழ்க்கை துணை மீதான அன்பு அதிகரிக்கும். குழந்தைகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சிறப்படையும். பணத்தை சேமிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது.
ரிஷபம் - புதிய வருமானத்திற்கு வாய்ப்புகள் ஏற்படும். பழைய முதலீடுகள் மூலம் வருமானம் வரும். புதிய வேலைகளை செய்ய திட்டமிடுவீர்கள். சில நல்ல செய்திகள் தேடி வரும். பயணங்களால் நன்மை ஏற்படும். நண்பர்களின் ஆதரவால் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம் - கோர்ட் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். அரசியல்வாதிகளால் நன்மை கிடைக்கும். வேலையில் உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். பேச்சில் நிதானம் வேண்டும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
கடகம் - அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். பயங்கள் ஏற்படலாம். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தினரின் உடல்நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். தொழில் சாதகமாக இருக்கும். சுப காரியம் தொடர்பான பேச்சுக்கள் அதிகரிக்கும்.
சிம்மம் - எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். பண விஷயங்களில் யாரையும் நம்பாதீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் நன்றாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கன்னி - நல்ல நாளாக இருக்கும். புதிய தொழில் துவங்க திட்டமிடுவீர்கள். காலை வேளையில் பொருளாதாரத்தில் சிக்கல்கள் ஏற்படலாம். ஆனால் மாலையில் நிலைமை சரியாகும். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். அனைத்தும் உங்களுக்கு சாதகமாக நடக்கும்.
துலாம் - குடும்பத்தினரின் ஆதரவு நிறைந்த நாளாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் நீங்கும். தினசரி வேலைகளில் முன்னேற்றம் ஏற்படும். உடல் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. சுப காரியங்கள் முடிவு ஆகலாம்.
விருச்சிகம் - பேச்சால் மற்றவர்களை கவருவீர்கள். வேலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பணவரவும் அதிகரிக்கும். புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
தனுசு - மனதில் குழப்பங்கள் ஏற்படலாம். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். வியாபாரத்தில் தடைபட்ட வேலைகள் சிறப்பாக முடியும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். புதிய முயற்சிகளை துவங்க ஏற்ற நாள்.
மகரம் - சிலருக்கு உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். எழுத்து துறையில் ஆர்வம் அதிகரிக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படலாம். வாழ்க்கை துணையின் அன்பு தைரியத்தை கொடுக்கும்.
கும்பம் - புதிய சொத்து சேர்க்கை ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டில் நல்ல நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. சிலர் வேலை தொடர்பாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம். வேலையில் இடமாற்றம் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
மீனம் - ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பொருளாதார ரீதியாக நிலைமை நன்றாக இருக்கும். வியாபாரம் நன்றாக இருக்கும். குடும்ப பிரச்சனைகளை வாழ்க்கை துணையின் ஆதரவுடன் தீர்ப்பீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சீனாவில் மீண்டும் ஒரு கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. வவ்வாலிலிருந்து மனிதர்களுக்கு பரவுமாம்!
2000 கோடி அல்ல.. 10000 கோடியே கொடுத்தாலும் சரி.. கையெழுத்துப் போட மாட்டோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
பிரதமர் நரேந்திர மோடியின்.. முதன்மைச் செயலாளரானார்.. சக்திகாந்த தாஸ்.. ஓய்வுக்குப் பின் புதுப் பதவி!
தான் யார்.. எதற்காக வந்தோம் என்பதே கமல்ஹாசனுக்குப் புரியலையே.. தவெகவின் அதிரடி தாக்கு!
பிப்., 26ல் தவெகவின் ஆண்டு விழா.. 2000 பேருக்கு மட்டும் தான் அனுமதி..!
சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா vs பாகிஸ்தான்.. நாளைக்கு ஜெயிக்காம விட்ரக் கூடாதுடா பரமா!
அனல் பறக்கும் பேச்சாளர்.. அதிரடி டிபேட்டர்.. நாம் தமிழர் கட்சியின் அடையாளம்.. யார் இந்த காளியம்மாள்?
தங்கச்சி காளியம்மாள் விலகுவதாக இருந்தால் விலகிக்கலாம்.. ரொம்ப நன்றி என்று சொல்வோம்.. சீமான்
சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள்.. நாம் தமிழர் கட்சிக்கு முழுக்கா?.. பரபரக்கும் இன்விடேஷன்!
{{comments.comment}}