தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 02 ம் தேதி, புதன்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், பங்குனி 19ம் தேதி புதன்கிழமை
கரிநாள். காலை 07.45 வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. பகல் 01.51 வரை கிருத்திகை நட்சத்திரம், பிறகு ரோகிணி நட்சத்திரம் உள்ளது. காலை 06.10 வரை சித்தயோகம், பிறகு பகல் 01.51 வரை அமிர்தயோகம், அதற்கு பிறகு சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
சந்திராஷ்டமம் - சித்திரை, சுவாதி
இன்றைய ராசிபலன் :
மேஷம் - குடும்பத்தில் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் மாற்றமான செயல்பாடுகளால் லாபத்தை உயர்த்துவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். தவறிய வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.
ரிஷபம் - விவேகமான செயல்பாடுகளால் நன்மதிப்பு அதிகரிக்கும். பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்பு திருப்தியை தரும். பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை குறைத்துக் கொள்ளவும்.
மிதுனம் - மாமன் வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். அரசு பணிகளில் இருந்த தடைகள் விலகும். பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். இறை சிந்தனைகள் அதிகரிக்கும். ரகசியமான சில ஆய்வுகள் தெளிவை உருவாக்கும். பாராட்டு நிறைந்த நாள்.
கடகம் - பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். கடினமா பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சமூக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டு பெறுவீர்கள். கலைத்துறையில் முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம் - வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். பேராசை இன்றி செயல்படுவது நன்மையை தரும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கெளரவ பதவிகள் மூலம் செல்வாக்கு உயரும். பயனுள்ள ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். நன்மை நிறைந்த நாள்.
கன்னி - மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு சிந்தித்து செயல்படவும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். தம்பதிகள் இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் கைகூடும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். லாபம் நிறைநாத நாளாக இருக்கும்.
துலாம் - எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்படும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கனிவான பேச்சுக்களால் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும். மற்றவர்கள் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். பண விஷயங்களில் கவனமுடன் நடந்து கொள்ளவும்.
விருச்சிகம் - வாழ்க்கை துணையுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். போட்டிகளில் ஈடுபட்டு பாராட்டுக்களை பெறுவீர்கள். மனதளவில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளியூரில் பணி வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் உயர்வு உண்டாகும். வெற்றியான நாள்.
தனுசு - வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். கனிவான பேச்சுக்களால் காரியத்தை சாதிப்பீர்கள். வழக்குகளில் திடீர் திருப்பம் ஏற்படும். பழைய சிக்கல்களுக்கு தெளிவு பிறக்கும். ஆன்மிக பணிகளில் புரிதல்கள் உண்டாகும். சவாலான பணிகளை சாதாரணமாக முடிப்பீர்கள். எதிர்காலம் தொடர்பான முடிவு எடுப்பீர்கள்.
மகரம் - பண வரவுகளில் உயர்வு உண்டாகும். குடும்ப சூழ்நிலை அறிந்து முடிவு எடுப்பீர்கள். புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். உற்பத்தி துறையில் பொறுமையை கையாளவும். நெருக்கடியான சூழல் ஏற்படலாம். உத்தியோகத்தில் முயற்சிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பரிவு நிறைந்த நாளாக இருக்கும்.
கும்பம் - உயர் பொறுப்பில் இருப்பவர்களின் சந்திப்பு ஏற்படும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். சுபகாரிய எண்ணங்கள் கை கூடும். பணிவு வேண்டிய நாள்.
மீனம் - புதிய விஷயங்களில் ஆர்வம் பிறக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலமான சூழல் ஏற்படும். எழுத்து துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மறைமுக தடைகள் அறிந்து கொள்வீர்கள். ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும்.
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!
Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!
மேகம் கருக்குது மழை வர பாக்குது.. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 03, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!
{{comments.comment}}