12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மார்ச் 01, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Mar 01, 2025,09:34 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு மார்ச் 01 ம் தேதி, சனிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், மாசி 17 ம் தேதி சனிக்கிழமை

கரிநாள். காலை 04.40 வரை பிரதமை, பிறகு துவிதியை திதி உள்ளது . பகல் 01.43 வரை பூரட்டாதி நட்சத்திரமும், பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.27 வரை சித்தயோகம், பிறகு பகல் 01.43 வரைமரணயோகம், அதற்கு பிறகு சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 07.30 முதல் 08.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


சந்திராஷ்டமம் -  ஆயில்யம், மகம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் -  நினைத்த காரியங்களை செய்வதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகு. உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது.


ரிஷபம் - நினைத்த காரியங்கள் கைகூடும். வித்தியாசமான ஆசைகள் பிறக்கும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுப காரியங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பாராட்டுகள் கிடைக்கும். 


மிதுனம் - குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். வியாபார பணிகளில் இருந்த வந்த போட்டிகள் குறையும். வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்படுவது நன்மை தரும். பிற மொழி பேசுபவர்களால் ஆதாயம் ஏற்படும். தொழிலில் ஏற்ற உண்டாகும். உயர்வு நிறைந்த நாளாக இருக்கும்.


கடகம் -  கடன் உதவிகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களை புரிந்து கொள்வீர்கள். வழக்கு செயல்களில் மாதகமான சூழல் அமையும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நெருக்கடியாக இருப்தவர்கள் விலகிச் செல்வார்கள். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும்.


சிம்மம் - தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டும்.குடும்பத்தில் அனுசரித்து செல்ல வேண்டும். தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்க வேண்டும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். இரவு அதிக நேரம் கண் விழிப்பதை தவிர்க்க வேண்டும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் ஏற்படும்.


கன்னி -  நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். போட்டிகள் சாதகமாக அமையும். சிந்னையின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படலாம். எதிலும் அமைதியுடன் செயல்படுவது நன்மையை அதிகரிக்கும்.


துலாம் - எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். அலுவலகத்தில் புதுமையான சூழல்கள் அமையும். மனநிலையில் சில மாற்றங்கள் ஏற்படலாம். செயல்களில் வேகம் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். கூட்டு வியாபாரத்தில் பொறுமை வேண்டும். நேர்மை வெளிப்படும் நாளாக இருக்கும்.


விருச்சிகம் - நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சுபகாரியங்களை முன் நின்று செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் திடீர் சந்திப்புகள் ஏற்படும். வியாபார இடமாற்றம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். அலுவலகத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். சிந்தனைகள் அதிகரிக்கும்.


தனுசு - எதிர்பாராத சில வேலைகள் முடடிவு பெறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபாரம் தொடர்பாக பயணம் ஏற்படலாம். அலுவலகப் பணிகளில் அமைதி உண்டாகும். சமூக பணிகளில் ஆர்வம் ஏற்படும். வேலை தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். பாராட்டு நிறைந்த நாளாக இருக்கும்.


மகரம் -  அலுவலகத்தில் முக்கியத்துவம் அதிகரிக்கும். சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் துணையாக இருப்பார்கள். வாகனத்தில் சிறு மாற்றங்கள் செய்வீர்கள். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய முயற்சிகளில் இருந்த தடைகளை சரி செய்வீர்கள்.


கும்பம் -   உங்கள் பேச்சுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வேலை தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். முகத்தில் தெளிவு ஏற்படும். வெற்றி நிறைந்த நாளாக இருக்கும்.


மீனம் - எதிலும் பரபரப்புடன் செயல்படுவீர்கள். நெருக்கமானவர்களின் தேவையை நிறைவேற்றுவீர்கள். தோற்ற பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும்.நேர்மறையான சிந்தனைகள் அதிகரிக்கும். சுப காரிய முயற்சிகள் கைகூடும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் இன்று.. 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. கோடை பருவமழை கணக்கீடு தொடக்கம்..!

news

சம்பா ரவை உப்புமா.. சூப்பர் டேஸ்ட்டி.. சுப்ரீ்ம் ஜாய்.. செஞ்சு பாருங்க.. சொக்கிப் போவீங்க!

news

தெலுங்கானா சுரங்க விபத்தில்.. 2 இன்ஜினியர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு!

news

இந்தி திணிப்பை கைவிட வேண்டும்.. மக்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி

news

பெண்கள் குறித்த சீமானின் பேச்சை டாக்டர் தமிழிசை ஆதரிக்கிறாரா?.. காங்கிரஸ் எம்பி சுதா கேள்வி

news

மார்ச் முதல் நாள்.. சிவனுக்கு ஏக வில்வம் சமர்ப்பித்து நவக்கிரக வழிபாடு செய்ய.. நலம் பெருகும்

news

தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வரும் தங்கம் விலை...இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள்: பிரதமர் மோடி, ஆளுநர், விஜய், ரஜினிகாந்த்.. வாழ்த்து..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மார்ச் 01, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்