சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.640 அதிகரித்துள்ளது. ஒரு கிராமின் விலை ரூ.7,225க்கும், ஒரு சவரன் ரூ.57,800க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து கடந்த 5வது நாளாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தங்கம் விலை கடந்த 18ம் தேதி சவரனுக்கு ரூ.480ம், 19ம் தேதி சவரனக்கு ரூ.560ம், 20ம் தேதி சவரனுக்கு ரூ.400ம் உயர்ந்திருந்தது. 21ம் தேதியான நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்திருந்தது. இன்றும் தங்கம் விலை உயர்ந்து சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2320 உயர்ந்துள்ளது. தொடர் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
ரஷ்யா உக்ரைன் இடையே முற்றி வரும் போர் உள்ளிட்ட காரணங்களால்தான் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் விலை உயர்வால், மக்கள் தங்கம் வாங்குவது மேலும் கனவாகி விடுமே என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர்.
சென்னையில் இன்றைய (22.11.24) தங்கம் விலை....
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.80 அதிகரித்து ரூ.7,225க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,882க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 57,800 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.72,250 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,22,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,882 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.63,056 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.78,820 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,88,200க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,225கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,882க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ..240க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,897க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,225க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,882க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,225க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,882க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,225க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,882க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,225க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,882க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,230க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,887க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ. 6,684
மலேசியா - ரூ.6,866
ஓமன் - ரூ. 7,034
சவுதி ஆரேபியா - ரூ. 6,864
சிங்கப்பூர் - ரூ.6,817
அமெரிக்கா - ரூ. 6,591
துபாய் - ரூ.6,936
கனடா - ரூ.6,997
ஆஸ்திரேலியா - ரூ.6,854
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.101 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 808 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,010 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,900 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,01,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு.. இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மதுரை சித்திரை திருவிழா... அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு!
மன ரீதியிலான பிரச்சனை... விரைவில் மீண்டு வருவேன்... நடிகை நஸ்ரியா!
இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு: நயினார் நகேந்திரன்!
இன்ஸ்டா ரீல்ஸால் மகள் கண் முன்னே பறிபோன தாயின் உயிர்..வைரலாகும் வீடியோ..!
அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை... பாஜக தேசிய தலைமை விளக்கம்!
வெயிலுக்கு இதமான குல்பி.. தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தின் மேல் கோயில் கோபுரம்...எதிர்க்கட்சிகள் கண்டனம்!