சென்னை: TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் நாளைக்குள் டிஎன்பிஎஸ்சி இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என அழைக்கப்படும் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-4 தேர்வு விண்ணப்பிக்கும் தேர்வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடைசி நாள் நெருங்குவதால் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழக அரசு பணிக்கு தேவையானவர்களை தகுந்த போட்டி தேர்வுகள் வாயிலாக தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு அமைப்பாகும். இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பட்ட முதல் தேர்வாணையம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் அரசு துறையில் உள்ள அனைத்து வகையான பணியிடங்களுக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் tnpsc தேர்வுகளை சிறந்த முறையில் நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது.
இந்த தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறை செயலாளர்களிடமிருந்து காலிப் பணியிடங்கள் விவரங்கள் பெறப்பட்டு, அட்டவணை வெளியிட்டு தேர்வுகள் நடத்தி ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு பணியிடங்களில் நிரப்பப்படுவார்கள். அந்த வகையில் 2024ஆம் ஆண்டு காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விவரங்கள் பட்டியலிட வேண்டும் என சமீபத்தில் நடந்த துறை சார்ந்த செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி வெளியிடப்பட்டது. பிப்ரவரி 28ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு முன்பாக இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பங்களின் மாற்றங்கள் திருத்தங்கள் ஏதேனும் செய்ய வேண்டியிருந்தால் மார்ச் 4-ம் தேதி முதல் 6ம் தேதிக்குள் அந்த திருத்தங்களைச் செய்ய வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்த அறிவிப்புக்கான எழுத்துத் தேர்வு ஜூன் மாதம் 9ம் தேதி காலை 9 மணி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற உள்ள குரூப்-4 தேர்வில் கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், தட்டச்சர் எழுத்தர், வன காவலர், வன கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக தான் தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வுகளை அறிவித்துள்ளது. இந்த தேர்வில் மூலம் 6244 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதில் 108 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களும், 2442 இளநிலை உதவியாளர் பணி இடங்களும், சுமார் 1700 தட்டச்சர் பணியிடங்களும் இடம்பெற்றுள்ளன. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் மூலமாக 6244 காலி பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டு இருக்கிறது.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}