2025 ஆம் ஆண்டுக்கான.. டிஎன்பிசி தேர்வு அட்டவணை வெளியீடு.. இணையதளத்தில் பார்க்கலாம்

Oct 10, 2024,04:01 PM IST

சென்னை:   தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், 2025ஆம் ஆண்டுக்கான டிஎன்பிசி தேர்வுக்கான அட்டவணைகள் வெளியாகி உள்ளன.


தமிழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப ஒவ்வொரு வருடமும் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.  இந்த தேர்வுகள் நடைபெறுவதற்கு முன்னதாகவே தேர்வு தேதிகள் குறித்த அட்டவணைகள் வெளியிடப்படுவது வழக்கம். இப்படி முன்கூட்டியே தேர்வு தேதிகள் மற்றும் அதன் விவரங்கள் வெளியிடப்படுவதால் மாணவர்கள் எளிதாக தங்களை தயார்படுத்தக் கொள்ள முடியும் என கூறப்படுகிறது.




அந்த வரிசையில் அடுத்த வருடம் அதாவது 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிசி தேர்வு அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி 


குரூப் 1 தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி நடைபெறும். இந்த தேர்வுக்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும் என்ற அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல் குரூப் 4 தேர்வு அடுத்தாண்டு ஜூலை 13ஆம் தேதியும், குரூப் 2 மட்டும் குரூப் 2 ஏ தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிசி நிர்வாகம் அறிவித்துள்ளது.


மேலும் 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் குறித்து விவரங்களை அறிந்து கொள்ள www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். அத் தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்கள் அறிக்கையில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. நாளை மறுநாள் 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

news

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது இனவாதக் கருத்து.. பொய்யான குற்றச்சாட்டு.. ஆளுநர் ஆர்.என். ரவி

news

டிடி தமிழ் விழாவில் பாடப்படாத .. தெக்கணமும் திராவிடநல் திருநாடும்.. முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்

news

டிடி தமிழ் என்று தமிழுக்கு புகழ் சேர்த்தது மத்திய பாஜக அரசுதான்.. அமைச்சர் எல். முருகன் விளக்கம்!

news

திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலையை கைவிட வேண்டும்.. எடப்பாடி பழனிச்சாமி

news

திராவிட நல் திருநாடு.. பயிற்சியின்றி தவறாக பாடியிருக்கிறார்கள்.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்

news

தமிழ்த் தாய் வாழ்த்தில் குளறுபடி.. கவனச் சிதறலால் நடந்த தவறு.. மன்னிப்பு கேட்டது டிடி தமிழ்!

news

9 மாதம் கழித்து 50 போட்ட விராட் கோலி.. டெஸ்ட் போட்டிகளிலும் புதிய மைல்கல்லை எட்டினார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்