ஆரம்பமே அமர்க்களமா இருக்கே.. விஜய் கட்சியின் கட் அவுட்கள் ஒரு நல்ல தொடக்கம்.. செல்வப்பெருந்தகை

Oct 25, 2024,01:29 PM IST

புதுக்கோட்டை: தமிழக வெற்றிக் கழக மாநாட்டு வளாகத்தில் தந்தை பெரியார்,  சட்டமேதை அம்பேத்கர் மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் கட் அவுட் அமைத்துள்ளது வரவேற்கத்தக்கது. இது ஒரு நல்ல தொடக்கம். ஆனால், விஜய்யின் நடவடிக்கைகள் அவருடைய பேச்சு, அவருடைய செயல்பாடு என்பது இனிவரும் காலங்களில் தான் தெரியும் என்று  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 


புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு திடலில், பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் மாவட்ட விளையாட்டு திடலில் பல கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு ஸ்டேடியம் கட்டப்பட்டு வந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுடன் அந்த கட்டிடம் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. 2018 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட வேண்டிய கட்டிடம் இதனால் வரைக்கும் கட்டி முடிக்கப்படவில்லை. மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது வேதனை அளிக்கிறது.


சென்னையில் ரூபாய் 4000 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. பராமத்துப் பணிகளை பொறுத்தவரை, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், மழை நேரத்தில் தான் அதனை வேகப்படுத்துகிறது. 


பாரத நாடு என்பது அனைத்து தரப்பு மக்களும் வாழ்ந்து வரக்கூடிய நாடு. அது, அப்படி இல்லாமல் ஒரு சாரார்கள் கூடிய நாடாக மாற்றுவதற்காக பாஜக முயற்சி செய்கிறது. உச்சபட்சமாக ஆளுநர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செனட்டில், நேற்று பாஜக அமைப்பைச் சேர்ந்த ஏபிவிபி பெண் ஒருவரை நியமித்துள்ளது கண்டிக்கத்தக்கது.




இந்தியா கூட்டணியை யாரும் பிரிக்க முடியாது:  இந்தியா கூட்டணி என்பது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்து தான் செயல்பட்டு வருகிறது. வலிமையாக உள்ளது. அதை யாரும் பிரித்திட முடியாது. இது ஒரு நல்ல கொள்கை கூட்டணி, வெற்றிக்காகவோ, தோல்விக்காகவோ இந்த கூட்டணி சேரவில்லை. தேசத்தின் பாதுகாப்பு முக்கியம் என்ற ரீதியில் தான் கொள்கையுடன் இந்த கூட்டணி செயல்பட்டு வருகிறது. நாட்டில் பாசிச செயல்களை செய்து வரும் பாஜகவை  அப்புறப்படுத்த வேண்டும் என்றால், அனைவரும் ஒன்றிணைந்து தான் செயல்பட வேண்டும்.


கூட்டணிக்குள் சில பிரச்சனைகள் கருத்து வேறுபாடுகள் ஆகியவை இருக்கத்தான் செய்யும். ஆனால், அது கூட்டணி உடைவதற்கு காரணமாக இருக்காது. இதனால், பிரிவினையை உருவாக்க முடியாது. அதில், நாங்கள் உறுதியாக உள்ளோம். யாரும் யாரையும் பலவீனப்படுத்த முடியாது. மக்கள் நினைத்தால் எந்த கட்சியையும் பலவீனப்படுத்த முடியும். யாரை பலப்படுத்த வேண்டும். யாரை பலவீனப்படுத்த வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியும். மக்கள் கையில் தான் அது உள்ளது. மக்கள்தான் தீர்மானிப்பார்கள்.


காங்கிரஸ் செய்து வருவது வாரிசு அரசியல் அல்ல: வயநாட்டில் பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடுவது ஐந்தாவது தலைமுறை ஆக வாரிசு அரசுகளை காங்கிரஸ் செய்கிறது என்ற குற்றச்சாட்டு தவறானது. இது வாரிசு அரசியல் கிடையாது. இந்த தேசத்திற்கு  தேவையான அரசியல். இந்த குடும்பம் செய்த  தியாகத்தை போல் யாராவது செய்துள்ளார்களா?  தியாகம் என்றால் என்னவென்று பாஜகவுக்கு  தெரியுமா?


விஜய்யின் ஆரம்பம் வரவேற்கத்தக்கது: தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பெரியார், அம்பேத்கர் மற்றும் காமராஜரின் கட் அவுட் அமைத்துள்ளது வரவேற்கத்தக்கது. இது ஒரு நல்ல தொடக்கம். விஜய்யின் ஆரம்பம் வரவேற்கத்தக்கது தான். ஆனால் விஜய்யின் நடவடிக்கைகள் அவருடைய பேச்சு அவருடைய செயல்பாடு என்பது இனிவரும் காலங்களில் தான் தெரியும். அவருடைய உரையில் இருந்து வாதத்தை தொடங்கலாம்.


அதிமுகவை பாஜக அழித்து வருகிறது:  அதிமுகவை பாஜக அழித்து வருகிறது என்று தொடர்ந்து நாங்கள் குற்றம் சாட்டி வருகிறோம். அதற்கு ஒரு உதாரணம் தான் எடப்பாடி  பழனிச்சாமியின் வலதுகரமாக உள்ள ராஜேந்திரன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்தது. பாஜகவின் வலதுகரமாக இருந்த ஓபிஎஸ் தீவிர ஆதரவாளராகக் கருதப்படும் வைத்திலிங்கத்தின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்தது. இனியாவது அதிமுக இதனை புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

TVK Flag: 5 வருடத்திற்கு பட்டொளி வீசிப் பறக்கப் போகும்.. விக்கிரவாண்டியில் ஏற்றப்படும் தவெக கொடி!

news

எங்களுக்கு டைமெல்லாம் கிடையாது.. உணர்வுப்பூர்வமா வேலை பண்றோம்.. தவெக நிர்வாகிகள் அசத்தல்!

news

ஆரம்பமே அமர்க்களமா இருக்கே.. விஜய் கட்சியின் கட் அவுட்கள் ஒரு நல்ல தொடக்கம்.. செல்வப்பெருந்தகை

news

வி. சாலை எல்லையில்.. இரு கைகளையும் விரித்தபடி.. இதய வாசல் திறந்து வைத்து காத்திருப்பேன்.. விஜய்

news

Sprituality: வீட்டில் செல்வம் சேர.. விளக்கேற்றி வழிபடும்போது.. தவறாமல் இந்த மந்திரத்தை சொல்லுங்க!

news

Gold Rate: வியாழக்கிழமை குறைந்திருந்த தங்கம் இன்று மீண்டும் உயர்ந்தது... எவ்வளவு தெரியுமா?

news

Deepavali Special Story: இப்பெல்லாம் யாருங்க துணி எடுத்து தைக்கிறாங்க.. நலிவடையும் சிறு டெய்லர்கள்!

news

தீவிர புயலாகவே கரையைக் கடந்தது.. டானா.. தமிழ்நாட்டிலும் ஒரு சில இடங்களில்.. இன்று மழைக்கு வாய்ப்பு!

news

அக்டோபர் 25 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

அதிகம் பார்க்கும் செய்திகள்