திருப்பரங்குன்றம் விவகாரம்.. முதல்வர் மென்மையாக இருக்கக் கூடாது.. செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

Feb 05, 2025,06:09 PM IST

சென்னை: காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக திருப்பரங்குன்றம் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் வழிபாடு செய்ய இருக்கிறோம்

திருப்பரங்குன்றத்தை கலவர பூமியாக மாற்றவும், மத நல்லினத்தை கெடுப்பதற்கும், அங்கே ஒரு கும்பல்  இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. இதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. முதலமைச்சர் இந்த விஷயத்தில் மென்மையாக இருக்கக் கூடாது. மதக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார். 


திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களிடையே மத நல்லிணக்கத்தை உருவாக்க நாளை காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக திருப்பரங்குன்றம் ஆலய வழிபாடு மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்காவை வழிபட இருக்கிறோம் என செல்வப் பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். 


இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:




திருபரங்குன்றம் ஆறுபடை வீட்டின் முதல் வீடு. இப்பொழுது அயோத்தியில் கலவரத்தை முடித்தவர்கள், அயோத்தியில் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தவர்கள். அந்த கூட்டம் இப்பொழுது ஆறுபடை வீடான முதல் படை வீடு திருப்பரங்குன்றத்தில் தன்னுடைய கலகத்தை செய்ய ஆரம்பித்து இருக்கிறது. வட மாநிலங்களில் இவர்களுடைய மத அரசியல் தோல்வியடைந்து வருகிறது. இப்போது தமிழ்நாட்டில் ஆறுபடை வீட்டு முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தை கலவரம் பூமியாக மாற்றவும், மத நல்லினத்தை கெடுப்பதற்கும், அங்கே ஒரு கும்பல் வெளியிலிருந்து மக்களைக் கூட்டி வந்து உள்ளூர் மக்களுக்கு எதிராகவும் இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. 


இதை காங்கிரஸ் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. நாளை காங்கிரஸ் இயக்கத்தின் சார்பாக திருப்பரங்குன்றம் ஆலய வழிபாடு செய்ய இருக்கிறோம். சிக்கந்தர் பாதுஷா தர்காவையும் வழிபட இருக்கிறோம். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இப்பொழுது பிரச்சார செய்ய காலகட்டத்தில் இருக்கிறோம். தமிழ்நாடு அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 


இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அது அந்நிய நாட்டு முதலீடாக இருக்கட்டும், தொழிற்சாலை உற்பத்தியாகட்டும், உள்நாட்டு உற்பத்தி, வெளிநாட்டு ஏற்றுமதிகள், கல்வித்துறையில்  புரட்சி, இதெல்லாம் கெடுப்பதற்கும் நசுக்குவதற்கும், இந்து முன்னணி அமைப்பினர் பாஜக துணையோடு தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். இதனை ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து இப்படிப்பட்ட சக்திகளை அடையாளம் காட்ட வேண்டும்.


ஆன்மீகம்  என்பது வேறு.அரசியல் என்பது வேறு. அரசியலை ஆன்மீகத்தில் கலக்கக்கூடாது. அரசியலை ஆன்மீகத்தில் கலந்தால் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பார்கள். ஆகவே தமிழ்நாடு அரசு இதனை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும்‌. இரும்பு கரம் கொண்டு மத கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்களை அடக்க வேண்டும். இதுதான் பேரு இயக்கத்தின் கோரிக்கை. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த விஷயத்தில் மென்மையாக இருக்கக் கூடாது. எந்தவித தயவு தாட்சனையும் காட்டக்கூடாது. 


ஏற்கனவே முருகன் அவர்கள் தலைவராக இருக்கும்போது, வேல் எடுத்துக் கொண்டு ஆறுபடை வீடுகளை சுற்றி வருகிறேன் என்று சென்றார்.  2021 தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.அதே நிலையில் தான் இப்போது முருகனைத் தொட்டிருக்கிறார்கள். முருகன் மிகவும் சக்தி வாய்ந்த இறைவன். அவரிடம் உங்களுடைய அரசியல் ஈடுபடாது. அவரே உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். 


திருப்பரங்குன்றத்தில் ஒருவர் போட்டியிடுவதற்காக திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினராக எப்படியாக ஆக வேண்டும் என்று எல்லா பொறுப்புகளிலும் கையாளுகிறார்கள், ஒருபோதும் ஆறுபடை வீடான முதல் படை வீடு முருகன் இதனை அனுமதிக்க மாட்டார் என்றார் செல்வப்பெருந்தகை.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?

news

Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!

news

அடிக்கிற வெயிலுக்கு லெமன் ஜூஸை குடிக்க நினைத்தால்.. எலுமிச்சை விலை அதிரடி உயர்வு..!

news

98 வது ஆஸ்கர் விருது விழா எப்போது நடைபெறும்..? தேதி குறிச்சாச்சு!

news

பிளாஸ்டிக் வேண்டாம்.. வேண்டவே வேண்டாமே.. கிரிஷ் சொல்லியாச்சு.. அப்ப நீங்க?.. கதையல்ல நிஜம்!

news

Today is Earth Day.. நம்மைக் காக்கும் அன்னை.. பூமியைக் காக்க விழித்துக்கொள்வோம்!

news

போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவையொட்டி.. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு!

news

Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!

news

Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?

அதிகம் பார்க்கும் செய்திகள்