22 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு..  அன்று மறுத்ததை இன்று மறைமுகமாக ஒப்புக் கொண்ட கே.எஸ். அழகிரி!

Feb 10, 2024,05:17 PM IST

சென்னை: கடந்த மாதம் 28ம் தேதி காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கருதப்படும் 21 தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் கொடுத்துள்ளதாக வெளியான செய்தியை, அப்படியெல்லாம் லிஸ்ட் கொடுக்கவில்லை என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மறுத்திருந்தார். ஆனால்  இன்று காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள 22 தொகுதிகளின் பட்டியலை எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார். 


மேலும் இந்த தொகுதிகளிலிருந்து 15 தொகுதிகளை திமுகவிடம் கேட்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.


ஜனவரி 28ம் தேதி ஒரு செய்தி வெளியானது. அதில், ஏற்கனவே கடந்த 2019 தேர்தலில் போட்டியிட்ட 9 தொகுதிகளுடன் மேலும் 12 தொகுதிகளையும் சேர்த்து 21 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விரும்புவதாக அந்தத் தகவல் தெரிவித்தது. இதற்கான உத்தேசப் பட்டியலையும்  காங்கிரஸ் குழு, திமுக குழுவிடம் தரவுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்தன.




22 தொகுதிகள் லிஸ்ட்


அதன்படி, கன்னியாகுமரி,  ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் (தனி), தென் சென்னை, அரக்கோணம், கிருஷ்ணகிரி, ஆரணி ஆகியவையே அந்தத் தொகுதிகள் என்றும் தகவல்கள் தெரிவித்தன.


ஆனால் அப்போது அந்த செய்தியை காங்கிரஸ் மேலிடம் உடனடியாக மறுத்தது. இந்த நிலையில் சன் நியூஸ் சானலுக்கு இன்று அழகிரி ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் இதை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார். அந்தப் பேட்டியில் அழகிரி கூறியிருப்பதாவது:


திமுகவிடம் 15 தொகுதிகளைக் கேட்க வேண்டும் என்று எங்களது கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். திமுகவினரை ஒருமுறைதான் சந்தித்துப் பேசியுள்ளோம். தொடர்ந்து பேசவோம். அதன் பின்னர் முடிவு செய்யப்படும்.


சிவகங்கை தொகுதியில் பிரச்சினையா?


22 தொகுதிகளில் எங்களுக்கான வெற்றி வாய்ப்பு உள்ளது. அதுகுறித்து லிஸ்ட் வைத்துள்ளோம். இதில் ஏற்கனவே ஜெயித்த தொகுதிகளும் உண்டு. 


சிவகங்கை தொகுதியில் மட்டுமல்ல எந்தத் தொகுதியாக இருந்தாலும் எல்லாரும்தான் கேப்பாங்க. தலைவர் சிதம்பரமே நிற்பதாக இருந்தால் பிரச்சினை வராது. இல்லை எனும் பட்சத்தில்ல் நிறையப் பேர் கேட்பார்கள். நிறையப் பேர் கேட்டால் மகிழ்ச்சிதான். அதில் தேவையானவரை கட்சி தலைமை முடிவு செய்யும்.


ஏன் டெல்லிக்கு ஓடுகிறீர்கள்?


மாநிலக் கட்சிகளில் என்ன நடக்கிறது.. முதலில் சீட் கேட்டு மாவட்டச் செயலாளரை அணுகுவார்கள். பினனர்,  சென்னைக்கு வருவாங்க. அதேபோலத்தான் தேசியக் கட்சியிலும்.. பெரிய வித்தியாசம் இல்லை. நிறையப் பேர் கேட்கணும் என்று ஆசைப்படுகிறோம். வெறிறி பெறும் வாய்ப்புள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்.


நான் போட்டியிடவில்லை


நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. தலைவராக இருப்பதால் போட்டியிட வேண்டும் என்று கட்டாயம் இல்லை. கடந்த முறையும் வாய்ப்பு  வந்தது. நான் போட்டியிடவில்லை. மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புகிறேன்.  


தமிழ்நாட்டில் கடந்த சட்டசபைத் தேரத்லில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட எங்களுக்கு, அதில் 72 சதவீத வெற்றி வாய்ப்பு கிடைத்தது. அதை வைத்து இப்போது கணக்கிடுங்கள். 


கதைக்கு உதவாத பாஜக கூட்டணி


பாஜக தலைமையிலான கூட்டணி என்பது கதைக்கு உதவாத ஒன்று. பூதாகரமாக சித்தரிக்கிறார்கள்.. ஆனால் அது காற்று போன பலூனாகவே இருக்கும். சிலர் ஆடம்பரமாக கல்யாணம் செய்வார்கள். கடைசியில் தயாரித்து வைத்த சாப்பாட்டை சாப்பிடுவதற்கு ஆளே இருக்காது. அதுபோலத்தான் பாஜகவின் நிலையும் என்று கூறினார் கே.எஸ். அழகிரி.


ஆக, காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளை முடிவு செய்து திமுகவிடம் தெரிவித்திருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதில் 15 தொகுதிகளை கேட்பதையும் அழகிரியே தனது வாயால் ஆமோதித்துள்ளார். திமுக இதில் எத்தனை சீட்டைக் கொடுக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்