தர்மபுரி: தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழ் புதல்வன் திட்டம் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பல லட்சம் மாணவ மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர். அதேபோல் மாணவர்களின் தனித்திறமையை வெளிக் கொண்டுவரும் நோக்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து வெற்றி பெறும் மாணவர்களுக்கு அரசு சார்பில் பரிசு தொகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
அந்த வரிசையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடத்த தமிழ் வளர்ச்சித் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த போட்டிகள் வரும் 20.8.2024 மற்றும் 21.8.2024 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதில் வெற்றிபெரும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 வழங்கப்படும் எனவும் மேலும், போட்டியில் வெல்லும் அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்பு பரிசாக மாவட்ட ஆட்சியர் சார்பில் ரூ.2000 பரிசுத்தொகையாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
{{comments.comment}}