சென்னை : புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு தமிழக அரசு புதிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
இதன் படி, அரசு விரைவு பஸ்களில் கோயம்பேடு, தாம்பரத்தில் இருந்து செல்வதற்கு முன்பதிவு செய்த பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரையிலான கட்டணம் அவரவர் வங்கிக் கணக்கிற்கு திருப்பி செலுத்தப்படும்.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பதிலாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும். டிசம்பர் 31ம் தேதியில் இருந்து ஜனவரி 30 வரை சொந்த ஊர் செல்வதற்கு பஸ் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணத்தை மேற்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விழுப்புரம், கும்பகோணம் மற்றம் சேலம் செல்லும் பஸ்கள் ஜனவரி 15ம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து வழக்கம் போல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்ட நிலையில், இன்று உடனடியாக வெளியூர் செல்லும் பஸ்களின் இயக்கம் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்
தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா..?
மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு
சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி
பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}