சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் பழுது குறித்து தொடர்ச்சியாக புகார் எழுந்த நிலையில், அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்யவும், பழுதுகறை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
48 மணி நேரத்தில் ஆய்வு செய்ததில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை உடனடியாக சரி செய்து அறிக்கை அனுப்பவும் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. இந்தப் பேருந்தை ஓட்டுநர் முருகேசன் (54) ஓட்டிச் சென்றார். அப்போது பேருந்து ஒரு வளைவில் திரும்பும் போது இருக்கையுடன் முருகேசன் வெளியே வந்து விழுந்தார். இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
அதேபோல சமீபத்தில் ஒரு அரசுப் பேருந்தின் படிக்கட்டு முழுமையாக கழன்று விழுந்தது. அதை அந்தப் பஸ்சின் கண்டக்டர் கஷ்டப்பட்டு தூக்கிச் சென்று சரி செய்த புகைப்படம், வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர வைத்தது. இப்படி அடிக்கடி பல்வேறு புகார்கள் எழுகின்றன. தமிழக அரசு அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்தது வந்தது.
இதுதவிர அரசு பேருந்துகளில் சீட்டுகள், படிக்கட்டுகள் உட்பட முறையாக பராமரிக்கவில்லை என தொடர்ச்சியாக புகார் எழுந்து வந்த நிலையில் தமிழக அரசு பேருந்துகள் முறையாக ஆய்வு செய்வது தொடர்பாக போக்குவரத்து துறை செயலாளர் பனீர் ரெட்டி மற்றும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் நேற்று சென்னை தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் தமிழக அரசின் கீழ் செயல்படும் அனைத்து பேருந்துகளும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய வேண்டும்.48 மணி நேரத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் ஆய்வு செய்து குறைகள் ஏதும் இருந்தால் அதனை உடனடியாக சரி செய்யவும், ஆய்வுகள் தொடர்பான அறிக்கையை போக்குவரத்து துறை செயலாளருக்கு சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு
மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்..யாரை எல்லாம் சந்திக்க திட்டம்?
தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!
நீட் எதிர்ப்பு என்பது... முதல்வர் ஆடும் சுயநல நாடகம்: பாஜக தலைவர் அண்ணாமலை!
நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.. குமரி அனந்தன் குறித்து டாக்டர் தமிழிசை உருக்கம்!
இலக்கியச் செல்வர்.. காங்கிரஸ் மூத்த தலைவர்.. காமராஜரின் சிஷ்யர்.. மறைந்தார் குமரி அனந்தன்!
மதுரை குலுங்க.. வைகை ஆற்றில் கள்ளழகர்.. வந்திறங்க போறாரு.. வெளியானது தேதி!
உலகமே எதிர்பார்க்கும் அஜித்தின் குட் பேட் அக்லி நாளை வெளியீடு.. உற்சாகத்தில் ரசிகர்கள்!