Arasu Bus .. அடடா கண்டக்டர் கிட்ட பாக்கி சில்லறை வாங்க மறந்துட்டேனே.. கவலைப்படாதீங்க.. இதை பண்ணுங்க!

Jul 11, 2024,06:54 PM IST

சென்னை:  நீங்கள் அரசு பேருந்துகளில் சில்லறை வாங்க மறந்து விட்டீர்கள் என்றால் கவலைப்படாதீர்கள். உங்களது சில்லறை பாக்கியை எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல், UPI மூலம் பெறலாம். அதற்காக தமிழக அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. 


திமுக அரசு பொறுப்பேற்ற பின் மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை  செய்து வருகிறது. குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை, மகளிர்க்கு இலவச பஸ் வசதி, நான் முதல்வன் திட்டம், போன்ற பல்வேறு திட்டங்கள் மக்களிடம் பேராதரவை பெற்றுள்ளன. இது தவிர தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில்  பேருந்து வசதிகளை மேம்படுத்தி உள்ளது. இதற்காக பல்வேறு திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது தமிழக அரசு. 




சென்னையில் நடந்து வரும் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கூட இந்தத் திட்டங்களால்தான் மக்கள் ஆதரவு திமுகவுக்கு அதிகமாக கிடைத்துள்ளதாக கூட சில முக்கிய தலைவர்கள் பேசியதாக செய்திகளும் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் ஒரு பிரச்சினைக்கு சூப்பரான தீர்வுத் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


அது வேறு ஒன்றும் இல்லை, பஸ்களில் தினசரி சந்திக்கும் சில்லறைப் பிரச்சினைதான். மாநகரப் பேருந்துகளில் ஏறும்போதே சில்லறையுடன் பயணியுங்கள் என பொதுமக்களிடம் பேருந்து நடத்துனர்கள் கறாராக பேசுவதுண்டு. இது தொடர்பாக பயணிகளுக்கும், கண்டக்டர்களுக்கும் இடையே சண்டை நடக்காத நாளே இல்லை. நீண்ட காலமாகவே இந்தப் பிரச்சினை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. மீதி சில்லறையை நடத்துனர்கள் சரியாக கொடுக்க மறுக்கின்றனர் என பல்வேறு புகார்கள் எழுந்து வந்தது. 


இதை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டுதான் உள்ளது. மாநகரப் பேருந்துகளில் ஏறும் பயணிகளிடம்  பயண சீட்டிற்கு சில்லறையாக கொடுக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கக்கூடாது என ஏற்கனவே உத்தரவு உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு தற்போது இன்னொரு சூப்பர் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதனை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அது என்ன சூப்பர் திட்டம் அப்படித்தானே கேக்குறீங்க. வாங்க அதை பற்றி பார்ப்போம்.


நீங்க மாநகர பேருந்துகளில் ஏறி விட்டு சில்லறை வாங்க மறந்துட்டீங்களா.. நோ டென்ஷன்.. நோ கவலை.. உங்க செல்போனை எடுங்க‌ அதுல 1800 599 1500 என்ற டோல் ஃப்ரீ நம்பரை டயல் செய்யுங்க. அதில் கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்து அனுப்பினால் , யூ பி ஐ (UP) மூலம் உங்களது சில்லறை பாக்கியை ஈஸியாக  பெற்றுக் கொள்ளலாம். 


ஆனால் அதற்கு ஒரு சில சின்ன கண்டிஷன். உங்க பயணச்சீட்டை பேருந்தில் இருந்து இறங்கியவுடன் கீழே போட்டு விடாதீர்கள். பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் சில்லறையைப் பெற முடியும். ஏனெனில் பாக்கி சில்லறையை வாங்குவதற்கு, உங்கள் பயண சீட்டு விவரங்களை தான் டோல் ஃப்ரீ எண்ணில் பதிவிட வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.


சூப்பர்ல!

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டு மண்ணில் பிரதமர் மோடி உறுதி தர வேண்டும்.. ஊட்டியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

news

நவீன பாம்பன் கடல் பாலம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. புதிய ரயிலுக்கும் பச்சைக் கொடி!

news

அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்திச்சேனா.. நாம் தமிழர் தலைவர் சீமான் திட்டவட்ட மறுப்பு!

news

Tamil Nadu rains.. இன்னும் 10 நாட்களுக்கு மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!

news

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்.. வீதிகளில் இறங்கிய மக்கள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

அதிகம் பார்க்கும் செய்திகள்