கண்டக்டர் கிட்ட இனி சில்லறைக்கு சண்டை வராது பாஸ்.. கூகுள் பே, போன் பே மூலம் டிக்கெட் வாங்கலாம்!

Jan 29, 2024,06:06 PM IST
சென்னை: யுபிஐ முறையில் சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகளில் சோதனை முறையில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பேருந்து பயணம் என்றாலே பயணிகளுக்கும், நடத்துனர்களுக்கும் பெரிய தலைவலியை கொடுக்கும் பிரச்சனை என்னவென்றால், சில்லறை பிரச்சனை. 50 பைசா இல்லை.. இறங்குறப்ப வாங்கிக்கங்க" என்று சொல்வார்கள்.. பலர் கொடுப்பார்கள்.. சிலர் மறப்பார்கள்.. இதனால் சண்டை வரும்.. இது வாடிக்கையானது. 

சில்லறை பிரச்சனையை சாதாரணமாக கூறிவிட முடியாது. சில்லறை இல்லை என்பதற்காக பேருந்தில் பயணம் செய்யும் பயணியை நடுரோட்டில் நடத்துனர் இறக்கி விடுவதும், நடந்துனர் சில்லறை தரவில்லை என்பதற்காக பயணிகள் கடுப்பாகி சண்டை போடுவதும் நிறைவே நிகழ்ந்துள்ளன. இது மட்டுமின்றி பேருந்து பயணமும் தடைபட்டு கைகலப்பு சம்பவங்கள் நடப்பதும், போலீஸில் புகார் கொடுக்கும் அளவிற்கு போன பிரச்சனைகளும் உண்டு. 



இந்த சில்லறைச் சண்டையை வைத்து வடிவேலுவே பல படங்களில் காமெடி செய்துள்ளார். இப்படி பேருந்து பயணத்தின் போது சில்லறையினால் நடந்த பிரச்சனைகளை கூறிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு அதிக பிரச்சனைகள் நடந்துள்ளன.

தற்போது இதில் இருந்து எளிதில் சில்லறை பிரச்சனை இல்லாமல் நிம்மதியாக பயணம் செய்வதற்கு ஒரு வழி கிடைத்துள்ளது. அது என்னன்னு  கேட்கீறீங்களா? .. வேறென்ன யுபிஐதான்..! யுபிஐ வசதியைப் பயன்படுத்தி பயணச்சீட்டு பெறும் வழியை அறிமுகப்படுத்தியுள்ளது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம். நாகரீக வளர்ச்சி ஒரு புறம் பாதிப்பு என்றாலும், மற்றறொரு புறம் சூப்பர் என்றும் சொல்லலாம். 

இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த  தமிழக அரசு ஏற்கனவே திட்டமிட்டு இருந்தது. அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், முதல் கட்டமாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பல்லாவரம் பேருந்து பணிமனையின் கீழ் இயங்கும் பேருந்துகளில் நடத்துனர்களுக்கு யுபிஐ மற்றும் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் பயணச்சீட்டு வழங்கும் வகையிலான புதிய கையடக்க கருவிகளை மாநகரப் போக்குவரத்து கழகம் வழங்கியுள்ளது.

தொடு திரை வசதி கொண்ட இந்த கருவியில் பயணிகள் ஏறும் இடம் மற்றும் இறங்குமிடத்தையும் தேர்வு செய்து அதற்கான கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. இக்கருவி மூலம் கார்டு மற்றும் யுபிஐ, க்யூஆர் குறியீடு பயன்படுத்தி பயணச்சீட்டு வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. சோதனை முறையில் இத்திட்டம் தற்போது செயல்படுத்தி உள்ள நிலையில், அதன் வெற்றி பயன்பாடு நிறை குறைகளை கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள மற்ற பணிமனைகளுக்கும் இக்கருவிகள் வழங்கப்படும் என மாநகரப் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிறகென்னப்பா.. இனி கையில் காசே இல்லாமல்.. ஏன் பர்ஸ் கூட இல்லாமல் கார்டை மட்டும் வைத்துக் கொண்டு ஜாலியா போலாமே!

சமீபத்திய செய்திகள்

news

Perth Test: 295 ரன்கள் வித்தியாசத்தில்.. ஆஸ்திரேலியாவை வச்சு செய்து.. இந்தியா அபார வெற்றி!

news

அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்.. ஒரே நேரத்தில் 5 அரசு வேலைகள்.. அசர வைத்த ஆசிரியர்!

news

Gold Rate: தொடர் உயர்வில் இருந்து திடீர் என சரிந்தது தங்கம்.. சவரனுக்கு ரூ.800 விலை குறைவு!

news

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக சபதம் ஏற்போம்.. சூர்யா, ஜோதிகா, ரேவதி, கார்த்தி உறுதி!

news

பெண்கள், பெண் குழந்தைகள் நலனுக்காக.. தனி இணையதளம் தேவை.. தவெக தலைவர் விஜய்

news

Rain Alert: டெல்டா மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு மிக கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்

news

Immunity Drinks: லேசான தலைவலி காய்ச்சலுக்கெல்லாம் டாக்டரிடம் ஓடாதீங்க.. இதை குடிச்சுப் பாருங்க!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 25, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Chennai Super Kings.. 3 ரவி.. RRR.. டெர்ரர் காட்டும் சூப்பர் கிங்ஸ்.. 2 நம்ம பசங்க.. களை வந்துருச்சு

அதிகம் பார்க்கும் செய்திகள்