சென்னை: முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பிற்கு இணங்க, பொதுமக்கள் வானிலை முன்னறிவிப்புகளை அறிந்து கொள்ள டி என் அலர்ட் செயலியை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் இன்று வெளியிட்டுள்ளார்.
முன்பெல்லாம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மழை வெயில் காற்று குளிர் போன்றவை அந்தந்த பருவ காலங்களில் முறையாக நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது மக்களின் வாழ்க்கை முறை மற்றும் காலநிலை மாற்றத்தால் பருவம் மாறி திடீரென மழை வெயில் என மாறி மாறி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு எப்போது மழை பெய்யும் எப்போது வெயிலடிக்கும் என்பதை கணிக்க முடியாத அளவிற்கு தற்போதைய நிலைமை உருவாகியுள்ளது.
குறிப்பாக மழைக்காலங்களில், மக்களின் நலனில் அக்கறை கொண்டு வானிலை மையங்கள் இதற்கான முன்னறிவிப்புகளை அறிவித்து வருகிறது. அதே வேளையில் அரசும் பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பிற்கு இணங்க வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ள வானிலை முன்னெச்சரிக்கையை வழங்கும் டிஎன் அலர்ட் கைபேசி செயலியை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இந்த செயலியை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை அமைச்சர் திரு கே.கே எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இன்று வெளியிட்டார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 30.9.2024 அன்று வடகிழக்கு பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நடத்திய ஆய்வு கூட்டத்தின் போது பொதுமக்களுக்கு வானிலை முன்னெச்சரிக்கை வழங்கும் செயலி தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை அமைச்சர் திரு கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் அவர்கள் இன்று (3.10. 2024) பொதுமக்களுக்கான டிஎன் அலர்ட் என்னும் கைபேசி செயலியை சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வெளியிட்டார்.
டிஎன் அலர்ட் செயலி பொதுமக்கள் எளிய முறையில் இயக்கக்கூடிய வானிலை செயலியாக உள்ளது. இச்செயலியின் மூலம் தம் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை பொதுமக்கள் தமிழிலேயே அறிந்து கொள்ளலாம். இந்த செயலியால் அடுத்த நான்கு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மழைமானி வாரியான தினசரி பெறப்பட்ட மழை அளவு, நீர் தேக்கங்களின் தற்போதைய நீர் இருப்பு ,விவரம் தங்களது இருப்பிடம் வெள்ள அபாயத்திற்கு உட்பட்டதா போன்ற தகவல்களை அறிந்து கொள்ளும் வசதி உள்ளது.
பேரிடர் மற்றும் கனமழையின் காரணமாக பாதிப்பிற்கு உள்ளாகும் மக்கள் தங்களது புகார்களை பதிவு செய்யவும் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் இந்த செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பேரிடர் குறித்து வானிலை முன்னெச்சரிக்கை இணை அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் பொதுமக்கள் ஆயத்த நடவடிக்கையில் மேற்கொள்ள உதவும் டிஎன் அலர்ட்(TN-alert ) செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஐஓஎஸ் ஆப்(IOS app store)ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து பொதுமக்கள் பயனடையுமாறு தமிழ்நாடு முதலமைச்சர், வருவாய் நிர்வாக ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார் என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}