"சம்திங் முக்கியமான அறிவிப்பு".. முதல்வர் மமதா பானர்ஜி சொன்ன "அனவுன்ஸ்மென்ட்" இதுதான்!

Mar 06, 2024,11:06 AM IST

கொல்கத்தா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக தகவல் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் பணியாற்றும் ஆஷா பணியாளர்களுக்கு ஊதிய உயர்வை அவர் அறிவித்துள்ளார்.


திர்ணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காளத்தில்  ஆட்சியில் உள்ளது. மமதா பானர்ஜி தலைமையில் பாஜகவுக்கு கடுமையான டஃப் கொடுத்து போராடிக்  கொண்டிருக்கிறது அக்கட்சி. பாஜகவுக்கும், திரிணாமூல் காங்கிரஸுக்கும் இடையிலான ஒவ்வொரு மோதலும் ஒரு யுத்தம் போலவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாஜகவும் விடாமல் தாக்கி வருகிறது, மமதாவும் விடாமல் தடுத்து வருகிறார்.


லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே உள்ளன. இதற்காக பல்வேறு கூட்டணி கட்சிகள் தங்களின் தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையை தீவிரமாக நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல்  காங்கிரஸ், சமாஜ்வாதி, உள்ளிட்ட 28 க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது .




இதில் உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு முடிவாகி விட்டன. இதேபோல் மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், டெல்லி மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி கட்சியின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டன .மேலும் திமுகவுடன் இந்திய கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து சமூகமாக பேசி  வருகிறார்கள். 


ஆனால் மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி சில நாட்களுக்கு முன்பு 40 தொகுதிகளிலும் தாங்கள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். இதனால் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இடையே பெரும் சலசலப்பு நிலவி வந்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் சுமூக உறவு ஏற்படுத்துவதற்காக காங்கிரஸ் தொடர்ந்து பேசி வருவதாகவும் தெரிவித்து வந்தது.


இந்த நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று நடந்த அரசு விழாவில், இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாகவும், இதனை அறிய எனது பேஸ்புக் பக்கத்தை பின் தொடரவும் எனவும் தெரிவித்திருந்தார். இதனால் அரசியல் வட்டாரம் பரபரப்பானது. அவர் என்ன அறிவிக்கப் போகிறார், அரசியல் ரீதியாக ஏதாவது பரபரப்பைக் கிளப்பப் போகிறாரா, கூட்டணி தொடர்பாக ஏதாவது கூறுவாரா, பாஜக குறித்து ஏதாவது பகீர் கிளப்புவாரா என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர்.


ஆனால் முற்றிலும் நேர் மாறான ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.  அதாவது மேற்கு வங்காளத்தில் பணியாற்றும் ஆஷா பணியாளர்களுக்கு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வை அவர் அறிவித்துள்ளார். அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ. 750 ஊதிய உயர்வையும், ஐசிடிஎஸ் உதவியாளர்களுக்கு ரூ. 500 உயர்த்தியும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய ஊதிய உயர்வு ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என்றும் முதல்வர் மமதா பானர்ஜி அறிவிதித்துள்ளார்.


சமீபத்திய செய்திகள்

news

Chennai temples: குழந்தை வரம் வேண்டுமா.. வேண்டுவதைத் தரும் சென்னை கர்ப்பரக்ஷாம்பிகை கோவில்!

news

Real life Story.. இரு மனம் கலந்தது... இருமுறை மணம் (திருமணம்).. கதையல்ல நிஜம்!

news

ராமதாஸ் குறித்த பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.. அன்புமணி ராமதாஸ்

news

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு வேற வேலை இல்லை.. முதல்வர் மு.க. ஸ்டாலின்

news

மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் யார்?.. தொடரும் குழப்பம்.. போட்டியில் முந்தும் பட்னாவிஸ்!

news

ஐந்து மாவட்டங்களில் இன்று கன மழை.. நாளை 8 மாவட்டங்களில் அதி கன மழை.. வானிலை மையம் தகவல்

news

தமிழ்நாடு சட்டசபை டிசம்பர் 9ம் தேதி கூடுகிறது.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

news

Red Alert: 3 மாவட்டங்களுக்கு நாளை, நாளை மறு நாள் 2.. ரெட் அலர்ட்.. மிக மிக கன மழை பெய்யும்!

news

Perth Test: 295 ரன்கள் வித்தியாசத்தில்.. ஆஸ்திரேலியாவை வச்சு செய்து.. இந்தியா அபார வெற்றி!

அதிகம் பார்க்கும் செய்திகள்