அகிலேஷ் யாதவுடன் கை கோர்த்தார் மமதா பானர்ஜி.. காங்.குக்கு கல்தா.. பாஜக ஹேப்பி!

Mar 18, 2023,03:30 PM IST

கொல்கத்தா: தேசிய  அளவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கூறி வரும் நிலையில் திடீரென 3 கட்சிகள் சேர்ந்து புதுக் கூட்டணியை உருவாக்கியுள்ளதால் டெல்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சமாஜ்வாடி கட்சி, திரினமூல் காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளன. இக்கூட்டணியில் பிஜூ ஜனதாதளமும் இணையவுள்ளது. இதனால் தேசிய அளவில் ஒரே கூட்டணி உருவாகக் கூடிய வாய்ப்பு சிதற ஆரம்பித்துள்ளது.


கொல்கத்தாவில் இன்று திரினமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மமதா பானர்ஜியை, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்யாதவ் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் இந்தக் கூட்டணி முடிவு செய்யப்பட்டது.  அடுத்த வாரம் பிஜூ ஜனதாதளம் தலைவர் நவீன் பட்நாயக்கை, மமதா பானர்ஜி புவனேஸ்வர் நகரில் சந்தித்துப் பேசவுள்ளார்.




பாஜக மற்றும் காங்கிரஸை சம தூரத்தில் வைத்து இருவரையும் வீழ்த்தும் திட்டத்துடன் தாங்கள் கை கோர்த்திருப்பதாக மமதாவும், அகிலேஷும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திரினமூல் தலைவர் சுதீப் பந்தோபத்யாயா கூறுகையில், எதிர்க்கட்சிகள் என்றாலே காங்கிரஸ் என்று பாஜக நினைக்கிறது. அப்படித்தான் மக்கள் மத்தியில் பதிய வைக்க பார்க்கிறது. இதன் மூலம் பிற எதிர்க்கட்சிகளை மதிக்காத நிலையை அது கடைப்பிடிக்கிறது.


எங்களைப் பொறுத்தவரை பாஜக மட்டுமல்லாமல் காங்கிரஸும் கூட எதிரிதான். இருவரையும் ஒடுக்கவே இந்தக் கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இதை மூன்றாவது அணி என்று நாங்கள் கூற மாட்டோம். இதுதான் பிரதான அணி. ஆனால் பிராந்திய கட்சிகள் எங்களுடன் கை கோர்த்தால் நிச்சயம் பாஜகவை வீழ்த்த முடியும் என்றார் சுதீப்.


ஆனால் மமதா பானர்ஜி அமைத்துள்ள இந்தக் கூட்டணியால் தேசிய அளவில் ஒருமித்த கூட்டணியை ஏற்படுத்த முயலும் எதிர்க்கட்சிகளுக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும். வாக்குகள் சிதறுவதால் நிச்சயம் இது பாஜகவுக்கு சாதகமானதாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஏற்கனவே பாஜகவிடம் மமதா பானர்ஜி அடி பணிந்து போய் விட்டார் என்று ஒரு பேச்சு உலவுகிறது. இந்த நிலையில் பாஜகவுக்கு சாதகமான ஒரு கூட்டணியை மமதா பானர்ஜி உருவாக்கியிருப்பது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை அதிர வைத்துள்ளது.


சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்