சென்னை: சென்னை டூ திருவண்ணாமலைக்கு இடையே 50 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு பாசஞ்சர் ரயில் இன்று முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் அறிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில் மிகப் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள இங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக பவுர்ணமி நாட்களில் இங்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
திருவண்ணாமலைக்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தருவதால் சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில் சேவைகளை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் நெடு நாட்களாக வேண்டுகோள் விடுத்து வந்தனர். பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்ற தெற்கு ரயில்வே, சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவையை தொடங்கியுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்ட்டோண்மென்ட் வரை இயக்கப்படும் தினசரி பயணிகள் ரயில் சேவையை திருவண்ணாமலை வரை நீட்டித்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த சேவை இன்று முதல் தொடங்கப்பட்டது.
இந்த ரயில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4.00 மணிக்கு புறப்பட்டு காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும் எனவும், மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 12 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை டூ திருவண்ணாமலை செல்லும் இந்த சிறப்பு ரயிலுக்கு கட்டணமாக ரூ.50 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}