Karthigai Maha Deepam 2024: கொடியேற்றத்துடன்.. திருவண்ணாமலையில் தொடங்கியது திருக்கார்த்திகை விழா!

Dec 04, 2024,05:59 PM IST

சென்னை: கார்த்திகை மாதம் என்றாலே இறைவனுக்கு படைக்கப்பட்ட மாதமாக பார்க்கப்படுகிறது. அதாவது கார்த்திகை மாதத்தில்தான் ஐயப்பன், முருகனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து பாதயாத்திரை செல்லும் வழக்கத்தை மக்கள் கடைபிடித்து வருகின்றனர். அதேபோல் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி, அம்மாவாசை, கார்த்திகை நட்சத்திரம், சோமவாரம், போன்றவை விசேஷ நாட்களாக கொண்டாடப்படுகின்றன.


குறிப்பாக கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரம் அதாவது திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த தினம். இந்த தினத்தில் கணவன் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என விரதம் மேற்கொண்டால் கண்டிப்பாக பலன் கிடைக்கும் என சாஸ்திர ரீதியாக கூறப்படுகிறது. இதனால் ஒவ்வொரு திருமணமான பெண்ணும் கார்த்திகை மாத சோமவார விரதம் மேற்கொள்கின்றனர். அதிலும் கார்த்திகை மாதம் வரும்  மகா தீபத் திருவிழா மிகவும் விசேஷமானது. இதுவும் சிவபெருமானுக்கு உகந்த நாட்கள் தான்.


இந்த நாட்களில் திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும். திருவண்ணாமலை அக்னி ஸ்தலமாகும்.  இங்கு ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசித்தால் வாழ்வில் முக்தி ஏற்பட்டு, மறுபிறவி என்பதே கிடையாது என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனால் கார்த்திகை தீபம் என்றாலே திருவண்ணாமலை கோவில் தான் நாம் நினைவுக்கு வரும்.




ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதி,  

மாலறியா நான்முகனுங் காணா மலை, 

போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம் என்று மாணிக்கவாசகர் போற்றுகிறார். அப்படி என்றால் திருவண்ணாமலையில்  இறைவன் ஜோதி வடிவாக காட்சியளிக்கிறார் என்பதையே கூறி இருக்கிறார். இறைவன் காட்சி கொடுக்கும் இந்த திருநாளையே கார்த்திகை தீபத் திருவிழாவாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகிறோம்.


நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் இந்த வருடம் மகா தீப திருவிழா  டிசம்பர் 4ஆம்  தேதியான இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 5 ஆம் தேதி  வெள்ளி இந்திர விமானத்திலும், டிசம்பர் 6ஆம் தேதி   வெள்ளி அன்ன வாகனத்திலும், டிசம்பர் 7ஆம் தேதி கற்பகவிருட்ச வாகனத்திலும், டிசம்பர் 8ஆம் தேதி ரிஷப வாகனத்திலும், டிசம்பர் 9ஆம் தேதி வெள்ளி ரதம், டிசம்பர் 10ஆம் தேதி திருத்தேரோட்டம், டிசம்பர் 11 குதிரை வாகனம், டிசம்பர் 12 ஆம் தேதி காமதேனு வாகனம் என பத்து நாட்கள் இறைவன் ஒவ்வொரு நாளும் திருவீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலிப்பார்.


பின்னர் கார்த்திகை மாதத்தின் மகா தீபத் திருவிழாவின் முக்கிய அம்சமான பரணி தீபம் டிசம்பர் 13ஆம் தேதி அதிகாலையிலும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படும். இந்த மகா தீபத்தை காண கோடிக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டு அண்ணாமலையாரே என கோஷத்துடன் திருவண்ணாமலையாரை தரிசனம் செய்வர்.


திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட பிறகு இல்லம் தோறும் வீடுகளில் மூன்று நாட்கள் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இல்லங்கள் தோறும் ஞானத்தின் ஒளிப்பிழம்பாய் இறைவன் காட்சியளிப்பது போன்று ஜெகஜோதியாக வீடுகள் முழுவதும் தீப ஒளியால் மின்னும். இதனை காணும் நமக்கு பாசிட்டிவ் எனர்ஜி என சொல்லக்கூடிய நல்ல சக்தி நம்மை தொற்றிக் கொள்ளும்.



டிசம்பர் 15ல் கார்த்திகை பெளர்ணமி கிரிவலம்




இந்த ஆண்டுக்கான முழு நிலவான பௌர்ணமி தினம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி கார்த்திகை மாதம்  ஞாயிற்றுக்கிழமை வருகிறது. பொதுவாக பௌர்ணமி நாளில் கிரிவலம் சென்றால் மன அமைதி பெறுவதுடன் மன அழுத்தங்கள் விலகும். அது மட்டுமல்லாமல் மலையை சுற்றி தான் சித்தர்களின் ஜீவ ஆத்மாக்களும் குடியிருக்குமாம்.


இதனால் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் சென்றால் மன அமைதி பெறுவதுடன் சித்தர் அருளும் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமியில் கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பு.அதிலும் கார்த்திகை மாதம் வரும் பௌர்ணமியில் கிரிவலம் வந்தால் நம் பாவங்கள் விலகி முக்தி கிடைக்கும். இது மட்டுமின்றி இந்த கார்த்திகை பௌர்ணமி ஞாயிற்றுக்கிழமை வருவதால் சிவலோக பதவி கிடைக்குமாம்.


அந்த வரிசையில் இந்த வருடம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி கார்த்திகை பௌர்ணமி ஞாயிற்றுக்கிழமை வருவதால், பௌர்ணமி நாளான ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் வந்தால் மிகச் சிறப்பு என கூறப்படுகிறது.


தீபத் திருவிழா ஏன்?




நாம் ஏன் கார்த்திகை மாதத்தில் விளக்கு ஏற்றுகிறோம் என்பது தெரியுமா.. அதுவும் மண் விளக்குகளில் ஏன் தீபம் ஏற்றுகிறோம் தெரியுமா.. மண் விளக்கு அதாவது அகல் விளக்கு என சொல்லக்கூடிய மண் விளக்குகளில் தீபம் ஏற்றும் போது மண்ணிலிருந்து நாம் பிறக்கும் தத்துவத்தை குறிப்பிடுகிறது. அதேபோல் நம் வாழ்க்கை முடிந்த நிலையில்  இறுதியாக  நம் ஆணவம் கர்வம் அனைத்தும்  தீயில் அழிந்து நம்மை அர்ப்பணிக்கிறோம். நமது வாழ்க்கை மண்ணில் தொடங்கி மண்ணிலேயே முடிவடைகிறது. அதாவது நம் பிறப்பு முதல் வாழ்க்கை முடியும் தருவாயை ஒரே விளக்கு தீர்மானித்து விடுகிறது என்பதை உணர்த்தவே தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது .


இந்த நன்னாளில் துன்பங்கள் விலகி வாழ்க்கை ஒளிமயமாய் மாற இல்லங்களிலும் வீடுகளிலும் தீபம் ஏற்றி வழிபடுவோம்.


இப்படிப்பட்ட அழகான வாழ்க்கை தத்துவத்தை நமக்கு எடுத்துரைக்கவே நம் முன்னோர்கள் அந்த காலம் முதல் தற்போது வரை நமது பாரம்பரியத்தை கடைபிடிக்க பல்வேறு வழிபாடுகளையும் அதற்கேற்ற வழிகளையும் நமக்கு தந்துள்ளனர் என்பதை நாம் நினைவில் வைத்து செயல்படுவோம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்