திருத்தணி முருகன் கோவிலுக்குப் போறீங்களா.. 3 மணி நேரம் நடை சாத்தப்படும்.. டைம் நோட் பண்ணிக்கங்க!

Aug 19, 2024,11:58 AM IST

சென்னை:   அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் இன்று 3 மணி நேரம் நடை சாத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.




தமிழ்நாட்டில் வரலட்சுமி நோன்பு மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு மக்கள் கோயில் மற்றும் சுற்றுலா தலங்களில் அதிகமாக கூடியிருந்தனர். அந்த வரிசையில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மூன்று மணி நேரம் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டது. தொடர்ந்து ‌பக்தர்கள்  காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இருப்பினும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால்  காலை 6:00 மணி முதல் இரவு 8.45 மணி வரை நடை திறக்கப்பட்டிருந்தது. இதனால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


இன்று பூணூல் அணிவிக்கும் தினமான ஆவணி அவிட்டம். இந்த நன்னாளில் அர்ச்சகர்கள் மற்றும் தலைமை குழுக்கள் பூணூல் மாற்றம் செய்வர். இதன் காரணமாக, திருத்தணி முருகன் கோவில் மதியம் 12 மணி முதல் 3:00 மணி வரை கோவில் நடை  சாத்தப்படும். இந்த நேரத்தில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி கிடையாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


மேலும் இந்த நேரத்தில் கோவிலில் பணி புரியும் அச்சகர்கள் மற்றும் குருக்கள் என மொத்தம் 75க்கும் மேற்பட்டோர் பூணூல் மாற்றம் செய்ய உள்ளனர். இதற்கான நிகழ்ச்சி இன்று கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்று மணிக்கு மேல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்