சென்னை: பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகின. அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். இதில் மாநில அளவில் 97.45 விழுக்காடு பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.
கடந்த மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரை +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தன. இத்தேர்வினை சுமார் 7 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். பிளஸ் 2 தேர்வு தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் மாதம் தொடங்கி நடந்து முடிவற்றுள்ள நிலையில், இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 97.45% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
திருப்பூர் - 97.45
ஈரோடு - 97.42
சிவகங்கை - 97.42
அரியலூர் - 97.25
கோவை - 96.97
விருதுநகர் - 96.64
பெரம்பலூர் - 96.44
திருநெல்வேலி - 96.44
தூத்துக்குடி - 96.39
நாமக்கல் - 96.10
தென்காசி - 96.07
கரூர் - 95.90
திருச்சி - 95.74
கன்னியாகுமரி - 95.72
திண்டுக்கல் - 95.40
மதுரை - 95.19
ராமநாதபுரம் - 94.89
செங்கல்பட்டு - 94.71
தேனி - 94.65
சேலம் - 94.60
சென்னை - 94.48
நீலகிரி - 94.27
கடலூர் - 94.36
புதுக்கோட்டை - 93.79
தர்மபுரி - 93.55
தஞ்சாவூர் - 93.46
விழுப்புரம் - 93.17
திருவாரூர் - 93.08
கள்ளக்குறிச்சி - 92.91
வேலூர் - 92.53
மயிலாடுதுறை - 92.38
திருப்பத்தூர் - 92.34
காஞ்சிபுரம் - 92.28
ராணிப்பேட்டை - 92.28
கிருஷ்ணகிரி - 91.87
திருவள்ளூர் - 91.32
நாகை - 91.19
திருவண்ணாமலை - 90.47
காரைக்கால் - 87.03
புதுச்சேரி - 93.38
வழக்கமாக விருதுநகர் மாவட்டம் டாப்பில் இருக்கும். இந்த முறை பின்னுக்குப் போயுள்ளது. வழக்கம் போல சென்னை மிகவும் பின்தங்கிப் போயுள்ளது. கடைசி இடத்தில் திருவண்ணாமலை மாவட்டம் உள்ளது.
9ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
வரும் 9ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in என்ற தளத்திலும் www.dge.tn.gov.in என்ற தளத்திலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளத்திற்கு சென்று மாணவர்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். மேலும் தங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்ச்சி முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் பள்ளிகளில் வழங்கிய தொலைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இது மட்டும் இன்றி அரசு மைய மற்றும் கிளை நூலகங்களிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
தங்கம் விலை விடாமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது ஏன்.. நிபுணர்கள் தரும் விளக்கம் இதுதான்!
கிண்டி அரசு மருத்துவமனை டாக்டரைக் கத்தியால் குத்திய விக்னேஷுக்கு.. ஜாமீன் மறுப்பு!
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
{{comments.comment}}