ஏழுமலையானே இது என்ன சோதனை.. திருப்பதி லட்டு கவுண்ட்டரில் தீ விபத்து.. அடுத்தடுத்து துயரம்!

Jan 13, 2025,05:44 PM IST

திருப்பதி : திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் விநியோகம் செய்யும் கவுண்ட்டரில் இன்று (ஜனவரி 13) திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்தடுத்து நடந்து வரும் நிகழ்வுகள் பக்தர்களை பெரிதும் அதிர்ச்சியும், கவலையும் அடைய வைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு கலந்திருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சை கிளம்பியது. இந்த சர்ச்சை சிறிது அடங்கிய, தற்போது வைகுண்ட ஏகாதசி விழா திருப்பதியில் நடைபெற்று வருகிறது. வைகுண்ட ஏகாதசி விழா துவங்குவதற்கு முன்பாகவே திருப்பதி வரலாற்றிலேயே இதுவரை நடக்காத சம்பவமாக, வைகுண்ட துவார தரிசனம் செய்வதற்கு எஸ்எஸ்டி டோக்கன் பெறுவதற்காக அதிகமான பக்தர்கள் குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.




இந்த சம்பவத்தில் காயமடைந்த பலர் திருப்பதியில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது திருப்பதி பக்தர்களிடம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த சோகத்தில் இருந்து பக்தர்கள் முழுவதுமாக மீண்டு வராத நிலையில், இன்று பிற்பகல் திருப்பதியில் ஏழுமலையான் கோவிலுக்கு அருகில் உள்ள லட்டு பிரசாத கவுண்ட்டரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பக்தர்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது.


லட்டு பிரசாதம் விநியோகம் செய்யும் இடத்தில் உள்ள 47வது கவுண்ட்டரில் திடீரென ஏற்பட்ட மின்சார கசிவு காரணமாக இதனால் கம்யூட்டரில் அழுத்தம் ஏற்பட்டு, கம்யூட்டரும் பாதிக்கப்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக லட்டு  விநியோகம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டு, அங்கிருந்த பக்தர்கள், தேவஸ்தான பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பிறகு தீயணைப்பு கருவிகள் கொண்டு மேலும் தீ பரவால் தடுக்கப்பட்டது. மின்சார விநியோகமும் நிறுத்தப்பட்டு, பழுதுகள் சரி செய்யப்பட்டது.   


ஏழுமலையான் கோவிலில் அடுத்தடுத்து நடந்து வரும் இது போன்ற அசம்பாவிதங்கள், விபத்துக்கள் பக்தர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தீ விபத்து குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சிறுகுறு தொழில்களில் தமிழகம் 3ம் இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தமிழ்நாட்டில்.. இன்று முதல் 25ஆம் தேதி வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!

news

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

news

மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!

news

வேண்டியதை நடத்தித் தரும் அபிஜித் நேரம்.. அற்புதமான அந்த 24 நிமிடங்கள்!

news

பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!

news

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு

அதிகம் பார்க்கும் செய்திகள்