ஹைதராபாத் : திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இது குறித்து திருப்பதி கோவிலுக்கு குடும்பத்துடன் வந்து சத்தியம் செய்ய அவர் தயாராக இருக்கிறாரா என முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கட்சியின் சார்பில் சவால் விடப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொடுக்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் புனிதமானதாகும். உலக புகழ்பெற்ற திருப்பதி லட்டு குறித்து சமீப காலமாக அதிக அளவில் வதந்திகள் சோஷியல் மீடியாவில் பரப்பப்பட்டு வந்தது. இதனால் லட்டில் முறைகேடு நடப்பதையும், கள்ளச்சந்தைகளில் திருப்பதி லட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதையும் தடுப்பதற்காக பல அதிரடி நடவடிக்கைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் கொண்டு வந்துள்ளது.
இதற்கிடையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருப்பதி ஏழுமலையான் லட்டு தயாரிப்பிற்காக நெய்யிக்கு பதிலாக விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டுள்ள தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர்களிடம் இருந்து வெங்கடேஷ்வர சுவாமியின் புனிதத்தை நாங்கள் காத்துள்ளோம் என தெரிவித்திருந்தார்.
ஒரு மாநிலத்தின் முதல்வரே, புகழ்பெற்ற திருப்பதி தலத்தில் வழங்கப்படும் பிரசாதம் குறித்து இப்படி ஒரு தகவலை தெரிவித்திருப்பது நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக ஏழுமலையான் பக்தர்கள் இதை கேட்டு குழப்பமடைந்தனர். சந்திரபாபு நாயுடுவின் கருத்திற்கு இதுவரை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் எந்த பதிலோ, விளக்கமோ அளிக்கப்படவில்லை. ஆனால் 24 மணி நேரத்திற்கு பிறகு ஜெகன் மோகன் ரெட்டி கட்சியின் எம்.பி., ஒருவர் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடு கூறிய தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள அவர், சந்திரபாபு நாயுடு அவர்கள் கட்சியின் தோல்வியை மறைப்பதற்காக தான் புனிதமான திருப்பதி கோவில் பிரசாதம் பற்றி இப்படி ஒரு பொய்யான தகவலை கூறி உள்ளார். ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. அந்த தோல்வியை மறைக்க, திசை திருப்ப தான் இப்படி ஒரு பொய்யை சொல்லி உள்ளார்.
திருப்பதி கோவில் பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டது உண்மை தான் என்றால், திருப்பதிக்கு சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் வந்து சத்தியம் செய்ய தயாரா? தங்களின் தவறுகளை மறைப்பதற்காக சந்திரபாபு நாயுடு இப்படி தரம் தாழ்ந்த கருத்துக்களை கூறுவார் என நினைக்கவில்லை என்றார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}