திருப்பதி லட்டு கலப்படம்.. புதிய விசாரணைக் குழு அமைத்து சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Oct 04, 2024,06:14 PM IST

டெல்லி:   திருப்பதி லட்டில் நடந்த கலப்படம் தொடர்பாக புதிய விசாரணைக் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விசாரணையை சிபிஐ இயக்குநர் கண்காணிக்குமாறும் அது உத்தரவிட்டுள்ளது.


கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டாதக மீடியாக்களிடம் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மிகப் பெரிய அரசியல் பிரச்சினையாக இது மாறியது.




ஆனால் முற்றிலும் இது பொய்யான குற்றச்சாட்டு என்று ஜெகன் மோகன் ரெட்டி விளக்கினார். குற்றச்சாட்டுக்களையும் அவர் மறுத்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. சமீபத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஆந்திர அரசு மற்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. 


லட்டில் நடந்த கலப்படம் தொடர்பாக முழுமையான ஆய்வு முடிவுகள் இன்னும் வரவில்லை. வந்துள்ள ஆய்வு முடிவுகளிலும் கூட தெளிவாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.. பின் ஏன் அவசரப்பட்டு மீடியாக்களுக்குப் போனீர்கள்.. கடவுள்களை அரசியலில் கலக்காதீர்கள். அவர்களை விட்டு வையுங்கள் என்று கடுமையாக கண்டித்தனர் நீதிபதிகள்.


இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது புதிய விசாரணைக் குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, இந்தக் குழுவில் 2 சிபிஐ அதிகாரிகள், 2 ஆந்திர மாநில காவல்துறை அதிகாரிகள், 2 மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இடம் பெறுவர். சிபிஐ இயக்குநர் இந்த விசாரணையைக் கண்காணிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது. அரசியல் போர்க்களமாக இது மேலும் தொடர்வதை அனுமதிக்க முடியாது. என்றும் நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்