திருவண்ணாமலையில் மீண்டும் மண்சரிவு... மகாதீபம் ஏற்றுவதில் சிக்கல் வருமா?.. குழப்பத்தில் பக்தர்கள்

Dec 07, 2024,05:09 PM IST

திருவண்ணமலை : திருவண்ணாமலையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் இந்த வருடம் அண்ணாமலையார் மலை மீது செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா என்பதை தாண்டி, மகாதீபம் ஏற்றுவதிலேயே சிக்கல் ஏற்பட்டு விடுமோ என அண்ணாமலையார் பக்தர்கள் பலரும் குழப்பமடைந்துள்ளனர்.


சமீபத்தில் வங்கடலில் உருவான பெஞ்சல் புயல், அதன் விளைவாக பெய்த கனமழையால் திருவண்ணாமலையில் வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டி தீர்த்ததால், 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் ராட்சத பாறை மற்றும் மண்சரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட சோகத்தில் இருந்தும், அதிர்ச்சியில் இருந்தும் அப்பகுதி மக்கள் இன்னும் முழுவதுமாக மீண்டு வரவில்லை. 




இந்நிலையில் 2024ம் ஆண்டிற்கான திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக டிசம்பர் 04ம் தேதி அண்ணாமலையார் கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, உற்சவங்கள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 13ம் தேதி திருக்கார்த்திகை அன்று அண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த மகாதீபத்தை தரிசிப்பதற்காக மலையேறி செல்ல 2000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் மண்சரிவு ஏற்பட்டு சில நாட்களே ஆவதால் திருக்கார்த்திகை அன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா? அல்லது ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுமா? என்ற குழப்பம் பக்தர்களிடம் ஏற்பட்டிருந்தது.


இந்த நிலையில் இன்று (டிசம்பர் 07) திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றுவதற்காக கொப்பரை எடுத்துச் செல்லும் பாதையில் 100 மீட்டர் அளவிற்கும், மலை மீது கொப்பரை வைக்கும் இடத்தில் 800 மீட்டர் அளவிற்கும் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. பாறைகள் உறுதியற்ற நிலையில், பலவீனமாக இருப்பதாகவும், மலையில் பல இடங்களில் புதைகுழிகள் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மகாதீப கொப்பறை வைக்கும் இடத்திலேயே மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், மகாதீபம் ஏற்றுவதில் சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சம் பக்தர்களிடம் எழுந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் என்ன முடிவு எடுக்கப் போகிறதோ என பதற்றம் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2025ல் இயற்கை கோரத்தாண்டவமாடும்.. அரசியல் கலகங்கள் தலைதூக்கும்.. ஜோதிடர் சிவ.ச நடராஜ தேசிகர் கணிப்பு

news

Yearender 2024: அஜீத்தால் பிரபலமடைந்த அஜர்பைஜான்.. அதிகம் கூகுள் செய்யப்பட்ட நாடு இதுதான்!

news

Yearender 2024: நாக்கில் வச்சதும்.. நச்சுன்னு சுவைக்கும் மாங்காய் ஊறுகாய்க்கு.. தேடுதலில் 2வது இடம்!

news

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் இன்றைய விலை என்ன தெரியுமா?

news

Gold rate.. ஏற்றமும் இல்லை, இறக்கமும் இல்லை... தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

news

இயக்குநர் சீனு ராமசாமியும் டைவர்ஸ்.. 17 வருட திருமண வாழ்விலிருந்து விடைபெறுவதாக அறிவிப்பு!

news

HBD Rajinikanth.. 75வது பிறந்த நாள்.. தலைவர்கள், திரையுலகின் வாழ்த்து மழையில் சூப்பர் ஸ்டார் ரஜினி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - டிசம்பர் 12, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : மேஷம் ராசி வாசகர்களே.. இந்த வருஷம் உங்க வருஷம்.. ஜமாய்ங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்