திருநெல்வேலிலே.. சும்மாவா.. பாதுகாப்பான காற்று தரக் குறியீட்டில்.. நெல்லைக்கு முதலிடம்!

Jan 17, 2025,05:41 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள இரண்டு நகரங்கள் பாதுகாப்பான காற்றின் தர குறியீடு பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதில்  திருநெல்வேலி முதல் இடத்தையும், தஞ்சாவூர் ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளது.


மனிதன் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் எப்படி ஆதாரமாக விளங்குகிறதோ அதற்கு நிகராக காற்றும் உள்ளது. ஏனெனில் மனிதன் சுவாசத்தில் தான் உயிர் வாழ்கிறான். மனிதன் மட்டுமின்றி  விலங்குகளும் பறவைகளும் காற்றின் மூலமாக தான் உயிர் வாழ்கின்றன. காற்றில் 21% ஆக்சிஜன், 78% நைட்ரஜன் மற்றும் 1 சதவிகிதம் மற்ற வாயுக்கள் உள்ளன.  காற்றில் உள்ள ஆக்சிஜனை பயன்படுத்தி மனிதர்களும்,  நைட்ரஜனை பயன்படுத்தி விலங்குகளும் சுவாசித்து உயிர் வாழ்கின்றன.


இப்படி மனிதர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்கும் காற்று சமீப காலமாக தொடர்ந்து மாசடைந்து வருகிறது. இதனை நமது கண்ணால் காண முடியாது. உணர்ச்சிகளாலும் உணர முடியாது. காற்றின் மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகளை சந்திப்பதால் மட்டுமே காற்றின் தரம் குறித்து அறிய முடிகிறது.


நவீனமயமாக்க காலகட்டத்தில் மக்கள் தொகை பெருக்கத்தால் வீடுகள் அதிகரித்து, மரங்கள் அழிப்பு, வாகன பெருக்கம், பெட்ரோல் பயன்படுத்துதல், வேதிப்பொருட்களின் பயன்பாடு, எரிமலை வெடிப்பு, கதிரியக்கம், போன்ற நடவடிக்கைகளால் காற்று மாசுபடுதலுக்கு காரணங்களாகின்றன. 




இப்படி காற்று மாசுபடுவதால் இருமல், சுவாச எரிச்சல், ஒவ்வாமை, மூச்சு திணறல் போன்ற குறுகிய கால விளைவுகளை ஏற்படுத்துகின்றன.  தொடர்ந்து காற்றின் மாசுபாடு அதிகரித்துக் கொண்டே சென்றால் நாள்பட்ட சுவாச நோய்கள், இருதய பிரச்சனைகள், நுரையீரல் பிரச்சனைகள், நரம்பியல் தாக்கங்கள் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. 


நமது சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது முதல் நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் வரை, மோசமான காற்றின் தரம் ஒரு  உலகளவில் பெரும் சவாலாக உள்ளது. அந்த வரிசையில் தான் டெல்லியில் சமீப காலமாகவே மக்கள் தொகை அடர்த்தி, வாகன பெருக்கம் அதிகரித்து காற்றின் தரம் படுமோசமாக நிலவி வருகிறது. இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி எப்போதுமே பட்டாசு வெடிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது. அதேபோல் வாகன கட்டுப்பாடுகளையும் சீர் செய்து வருகிறது.


AQI அதாவது காற்றின் தரக் குறியீடு அளவுகள் பல்வேறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 0-50 வரை இருந்தால் பாதுகாப்பானது. 51-100 வரை இருந்தால் திருப்திகரமானது. 201-300 வரை இருந்தால் மோசமானது. 301-400 வரை இருந்தால் மிக மோசமானது.

401-450 வரை இருந்தால் கடுமையான மாசு என்று அர்த்தம்.


இதன் அடிப்படையில் காற்று மாசுக் கட்டுப்பாட்டு  வாரியம் நாடு முழுவதும் காற்று  மாசு காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட   நகரங்கள் மற்றும் பாதுகாப்பான நகரங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டுள்ளது. இது குறித்த பட்டியலையும் வெளியிட்டுள்ளது. 


அதில் நாட்டிலேயே பாதுகாப்பான காற்றின்  தரக்குறியீடு பட்டியலில் திருநெல்வேலி முதல் இடத்தை பிடித்துள்ளது. இதன் காற்றின் தர குறியீடு 33 ஆகும். தஞ்சாவூர் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. 


காற்று தர குறியீட்டில் பாதுகாப்பான இடத்தைப் பிடித்துள்ள டாப் 10 நகரங்கள்: 


1.நெல்லை (தமிழ்நாடு),

2.நஹர்லாகன் (அருணாசல பிரதேசம்),

3.மடிகேரி (கர்நாடகா),

4.விஜயபுரா (கர்நாடகா),

5.தஞ்சாவூர் (தமிழ்நாடு),

6.கொப்பல் (கர்நாடகா),

7.வாரணாசி (உத்தரபிரதேசம்),

8.ஹூப்ளி (கர்நாடகா),

9.கண்ணூர் (கேரளா),

10.சால் (சத்தீஸ்கர்).


இந்த பட்டியலில் தமிழ்நாட்டின் இதர நகரங்கள் இடம் பெறவில்லை என்பது கவலைக்குரியது. அதிக அளவாக கர்நாடகத்திலிருந்து 4 நகரங்கள் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், மாசு குறைவாக இருக்கும் மாநிலமாக கருதப்படும், இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவிலிருந்து ஒரே ஒரு நகரம்தான் இடம் பிடித்துள்ளது என்பதும் ஆச்சரியமானது.


அதேபோல்  காற்றின் தர குறியீடு மிக மோசமாக உள்ள நகரங்களின் பட்டியலில் டெல்லி முதல் இடத்தை பிடித்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

 

காற்று மாசுபாட்டில் பாதிக்கப்பட்ட டாப் 10  நகரங்கள்


1.டெல்லி

2.காசியாபாத் (உத்தரபிரதேசம்),

3.பைரனிஹாட் (மேகாலயா),

4.சண்டிகர் (பஞ்சாப்),

5.ஹபூர் (உத்தர பிரதேசம்),

6.தனபாத் (ஜார்க்கண்ட்),

7.பாடி (ஹிமாச்சல பிரதேசம்),

8.கிரேட்டர் நொய்டா (உத்தர பிரதேசம்)

9.குஞ்சேமுரா (மஹாராஷ்டிரா),

10.நொய்டா (உத்தர பிரதேசம்)


மோசமான காற்று மாசுபாடு உள்ள நகரங்கள் வரிசையில் தமிழ்நாட்டிலிருந்து எந்த நகரமும் டாப் 10 பட்டியலில் இடம் பெறவில்லை என்பது ஆரோக்கியமானது, ஆறுதலானதும் கூட. இந்தப் பட்டியலில் உத்தரப் பிரதேசம்தான் அதிக அளவாக நான்கு நகரங்களைக் கொண்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்