திருநெல்வேலி: திருநெல்வேலியை அதிர வைத்துள்ள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் பலரும் உதவிக் கரம் நீட்டி வருகின்றனர். அந்த வகையில் நெல்லையின் மிக முக்கிய அடையாளமான இருட்டுக்கடை அல்வா நிறுவனம் மக்களுக்கு அருமையான உதவியைச் செய்து வருகிறது.
எதிர்பாராத வெள்ளத்திலும், இதுவரை இல்லாத அளவுக்கு பெய்த மழையிலும் ஸ்தம்பித்துப் போய் விட்டது நெல்லை. கம்பீரமான நெல்லை இன்று தண்ணீரில் மிதப்பது பலரையும் கண்ணீர் விட வைத்துள்ளது.
மக்களே ஒருவருக்கொருவர் அங்கு உதவி வருகின்றனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களே திரண்டு சென்று உதவிகளைச் செய்து வருகின்றனர். கட்சிகள், ரசிகர் மன்றங்கள், பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றன.
இந்த வகையில் நெல்லையின் அடையாளமான இருட்டுக்கடையும் களத்தில் இறங்கியுள்ளது. நெல்லை என்றாலே அல்வாதான்.. அல்வா என்றால் முதலில் அனைவரும் போய் நிற்கும் இடம் இருட்டுக்கடைதான். அத்தகையக பிரபலமான இருட்டுக்கடை தற்போது வாகனம் மூலம் மக்களுக்கு உதவி செய்து வருகிறது.
வெள்ள பாதிப்பு இருக்கும் மக்களுக்கு தேவையான பிஸ்கட், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை கொடுத்து உதவுகிறது இருட்டுக்கடை. இதுதொடர்பான தேவை உள்ளோர் தொடர்பு கொள்ள உதவி எண்களையும் இருட்டுக்கடை நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி தேவைப்படும் நபர்கள் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் - 6369899807 / ஹரி சிங் 9994368894. இக்கடின காலத்தை நம் அன்பால் மீட்டெடுப்போம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மிகப் பெரிய விஷயம்.. எல்லோரும் இதுபோல ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கை கொடுப்போம்.. நெல்லையை மீட்போம்.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}