"தூதுவளை இலை அரைச்சு".. பணியாரம் செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா.. நுரையீரலுக்கு ரொம்ப நல்லதுங்க!

Jan 20, 2024,05:08 PM IST

சென்னை: வணக்கம் மக்களே.. எல்லாரும் எப்படி இருக்கீங்க.. இன்னும் பனி போகலைல்ல?.. தை பொறந்தா வாழ்க்கைக்கு நல்ல வழி பிறக்கும்.. ஆனால் தை முடிஞ்சாதான் பனிக்கு டாட்டா காட்டா முடியும். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கிட்டுதான் ஆகணும்.


இந்தக் குளிர் காலத்துல நம்ம வீட்ல இருக்க குழந்தைங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் சளி, இருமல், தும்மல்னால அவதிப்படுவாங்க. அவங்களுக்கெல்லாம் வீட்டிலேயே ஈஸியா ஒரு ஹெல்த்தி ரெசிபி செஞ்சு கொடுத்து அவங்கள சாப்பிட சொல்லுங்க.. அப்படி ஒரு ஈஸியான ஹெல்த்தியான ரெசிபி தான் நான் இன்னைக்கு உங்களோட ஷேர் பண்ண போறேன்.


அது வேற ஒன்னும் இல்லங்க.. நம்ம வீட்டிலேயே அல்லது வீட்டுக்குப் பக்கத்திலேயே கிடைக்கிற தூதுவளைய வச்சு தான் ஒரு ரெசிபி பண்ண போறோம்.. என்ன தெரியுமான.. சூப்பரான சுவையான பணியாரம்.. எப்படி பண்ணனும்னு விளக்கமா சொல்றேன் கேட்டுக்கங்க.




தேவையான பொருட்கள்


தூதுவளை - 1 கட்டு

பச்சை மிளகாய்- 2 

இஞ்சி - 1 துண்டு

பெருங்காயத்தூள் - சிறிதளவு

மிளகுத்தூள் - 1 ஸ்பூன்

வெங்காயம் - 1 (பெரியது) 

ரவை - 1 கப்

இட்லி மாவு - 1கப்

கேரட் - 2 

கொத்தமல்லி  - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு.            


செய்முறை: 


முதலில் ஒரு கட்டு தூதுவளையை தண்ணீரில் நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ளவும். பின் ஒரு மிக்ஸி ஜாரில்  கழுவிய தூதுவளை, இரண்டு பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, ஒரு கப் ரவை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் ஒரு கப் இட்லி மாவு, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் , சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். 


பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் துருவிய கேரட் சேர்த்து நன்கு வதக்கி மாவில் கலந்து கொள்ளவும். பின் குழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்து மாவை பணியாரங்களாக ஊற்றி இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன் சூடாக எடுத்து பரிமாறவும். அவ்வளவுதாங்க ஈஸியான ஹெல்த்தியான தூதுவளை பணியாரம் ரெடிங்க... சூடா சாப்பிட வேண்டியதுதான்!


நீங்களும் உங்க வீட்ல இந்த ரெசிபியை செஞ்சு இந்தக் குளிர்கால நோய்களிலிருந்து உங்களையும் உங்க வீட்ல இருக்கிறவங்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். 


ஓகே.. அடுத்து இன்னொரு ஹெல்த்தியான ரெசிபியோட மறுபடியும் வர்றேன்.. அதுவரைக்கும்.. பை!

சமீபத்திய செய்திகள்

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்