திருவள்ளூர்: மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் அக்கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மும்மொழி கொள்கை விவகாரம் கடந்த சில நாட்களாக மத்திய அரசிற்கும் , மாநில அரசிற்கு ஒரு சவாலானதாக இருந்து வருகிறது. மும்மொழி கொள்கையை ஏற்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அதனை தமிழக அரசு ஏற்க மறுத்து வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ விஜயகுமார். இவர் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளராக செயல்பட்டு வந்தவர். இவர் நேற்று பெரியபாளையம் அருகே பாஜக சார்பில் நடைபெற்ற மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டார். இந்த சம்பவம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கண்ணியத்திற்கு மாசு விளைவிக்கும் நோக்கில் கட்டுப்பாட்டை மீறியதால் விஜயகுமார் கட்சியின் பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எட்பபாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயம் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் கொண்டு நீக்கி வைக்கப்படுகிறார். கழகத்தின் உடன் பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் நான் இருமொழி கொள்கை தான் என்று சொன்னேன். பாஜகவினர் வற்புறுத்தி கையெழுத்து வாங்கினர். நான் நீக்கப்பட்டது குறித்து எங்கள் பொதுச்செயலாளரைச் சந்தித்த பேசுவேன் என தெரிவித்துள்ளார்.
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!
Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!
மேகம் கருக்குது மழை வர பாக்குது.. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 03, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}