சென்னை: மழையால் பாதிக்கப்பட்டு உதவி வேண்டுபவர்கள் தேமுதிய அலுவலகத்தை தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்யத் தொடங்கிய நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்டு உதவி வேண்டுபவர்கள் தேமுதிய அலுவலகத்தை தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மட்டுமில்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை என்று வானிலை மையம் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டு இருக்கிறது. தமிழகம் முழுவதும் அதீத கன மழை ரெட் அலர்ட் என்கின்ற செய்தியை தொடர்ந்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது. அனைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் அனைத்து மாவட்டங்களிலும் மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்து இந்த மழைக்காலத்தில் மக்களை பாதுகாக்க வேண்டும்.
சென்னைக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் அனைத்து மாவட்டங்களிலும் மழை வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை உடனடியாக பாதுகாத்து அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து, மாத்திரைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என அனைத்தும் தாமதம் இல்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டும். முக்கியமாக மலைப்பகுதிகள், தாழ்வான பகுதிகள், குடிசை பகுதிகள் மருத்துவமனைகள் பள்ளிகள் இருக்கின்ற பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி இந்த மழை வெள்ளம் மக்களை எந்த விதத்திலும் பாதிக்காத வண்ணம் அரசு உடனடியாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான்கு ஆண்டுகால ஆட்சியில் இருக்கும் திமுக அரசு 4 ஆண்டு காலமும் மழை வெள்ளம் ஏற்படும் போது 95% வேலைகள் நிறைவு பெற்றுவிட்டதாக சொல்லும் அரசு இன்றைக்கு வரைக்கும் எந்தவித வேலைகளையும் முடிந்ததாக தெரியவில்லை. மழை நீர் வடிகால் திட்டமும், மெட்ரோ திட்டமோ இன்றுவரை நூறு சதவீதம் முடியவில்லை. எனவே சாலையில் செல்பவர்கள், இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் செல்பவர்கள் என அனைவருமே பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஏற்கனவே மூன்று உயிர்கள் மழை தேங்கி இருக்கும் குழியில் விழுந்து இருந்ததாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றது.
மின்சார துறையையும் இந்த அரசு வருட நடையாக துரித பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். எங்கெல்லாம் மின்வெட்டு பாதிப்பு, மின் கம்பங்கள் சாய்வது, உயர் மின் அழுத்தம்பிகள் அருந்து விடுவதை உடனடியாக கண்காணித்து மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பாதுகாக்க வேண்டும். மக்களுக்கு தேவையான இட வசதி, மருத்துவ வசதி என அனைத்தையும் தயார் நிலையில் வைத்து மழைக்காலத்தில் மக்களை காக்க வேண்டியது இந்த அரசின் கடமை.
தாழ்வான பகுதிகளை இருப்பவர்கள், மழை நீரால் பாதிக்கப்பட்டவர்கள் தேமுதிக அலுவலகத்தை (கேப்டன் ஆலயம்)நீங்கள் தங்க பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு வேண்டிய உணவுகள் அங்கு வழங்கப்படும். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அவரவர்கள் இருக்கும் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவியை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும். "இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே" என்ற நமது தலைவரின் கொள்கைப்படி நம்மால் இயன்ற உதவியை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து உதவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}