மிக கனமழை எச்சரிக்கை.. தூத்துக்குடி - சென்னை விமான சேவை ரத்து

Dec 17, 2023,04:48 PM IST

சென்னை : தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை - தூத்துக்குடி இடையேயான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 


நெல்லை, தூத்துக்குடி, கன்னியாக்குமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்த 4 மாவடட்டங்களுக்கும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. மழை, வெள்ளம் என 4 மாவட்டங்களும் வெள்ளகாடாகி உள்ளன.




இதனால் சென்னையில் இருந்த தூத்துக்குடி வரை செல்ல வேண்டிய விமானங்கள் மோசமான வானிலை காரணமாக மதுரை விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டன. தொடர் மழை காரணமாக நிலைமை மேசாமடைந்து வருவதால் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானங்களும், தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்ல வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பகல் 3.45 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை புறப்பட்டு செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்