"ப்பா"..  தலையில பூ வைக்கலாம்.. ஆனால் பூக்கடையையே தூக்கி வச்சா.. இப்படி பண்றீங்களேம்மா!

Nov 29, 2023,05:48 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: "ப்பா.. யாருடா இந்த பொண்ணு..? தலையில பூவ வைக்காம பூக்கடையே வச்சிருக்காங்க"..  இப்படித்தாங்க இந்த பொண்ணைப் பார்த்தா சொல்லத் தோணுது.


பொன் வைக்கிற இடத்துல பூவை வைக்கணும்னு சொல்வார்கள்.. ஆனா இவங்களோ.. பூக்கடையையே தூக்கி வச்சுட்டாங். இதையெல்லாம் பார்க்கும் போது "முடியலை.. முடியலை".. அப்படின்னு வடிவேலு அலுத்துக்குவது போலத்தான் நமக்கும் லைட்டா டென்ஷனாகுது.


வர வர "ட்ரெண்ட்" என்ற பேர்ல கொஞ்சம்.. இல்லை இல்லை.. ரொம்ப ஓவரா தான் போறாங்க. திருமணத்தின்போது, பெண்ணுக்கு அலங்காரம் முதல்  உடை வரை எல்லாத்திலேயும் வித்தியாசமாக  தான் செய்கிறார்கள். சுப நிகழ்ச்சிகளில் பெண்களுக்கு முதலில் சூட்டுவது பூக்கள் தான். பெண்களுக்கு பூக்கள் தான் அழகு. அந்த பூக்கள் இல்லை என்றால் திருமணம் போலவே இருக்காது. அந்த அளவிற்கு பூக்கள் முக்கியம்தான்.




ஆனால் அலங்காரமெல்லாம் அந்தப் பெண்ணின் அழகைத் தூக்கிக் காட்டுவதாக இருக்க வேண்டும்.. அல்லது அடடா நம்ம பொண்ணா இது என்று ஆச்சரியப்பட்டு சந்தோஷிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும்.. அதுதானே நியாயம்.. அதானே உலக வழக்கம்.. ! ஆனால் இப்பெல்லாம் நம்மாளுங்க பண்ற "அக்கப்போர்" இருக்கே..  தாங்க முடியலைங்க.


இந்த வீடியோவைப் பார்த்தபோது அப்படியே ஷாக்காயிட்டோம். இது வளைக்காப்பா அல்லது கல்யாணப் பெண்ணான்னு தெளிவாத் தெரியலை.. அந்தப் பெண் தலையில் பெரிய சைஸ் அலங்காரத் தட்டி போல டிசைன் செய்துள்ளனர். மெல்ல ஸ்லோமோஷனில் அந்தப் பெண் தனது தலையைத் திருப்பிக் காட்டுகிறார். முன்பக்கம் பார்த்தபோது பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை.. ஆனால் பின்னாடி கூடி தனது தலையலங்காரத்தை அவர் காட்டியபோது "ஆத்தாடி" என்று தலை சுற்றிக் கொண்டு வருகிறது. அவ்வளவு பெரிய மலர்த் தட்டி மாதிரி இருக்கு!


மலர்களை வைத்து தட்டி போல தயார் செய்து அதைத் தூக்கி அந்தப் பெண்ணின் கொண்டையில் செருகியுள்ளார்கள் போல. பெண்ணின் கழுத்தில் மா இலையையும்  மாலை போல தொங்க விட்டுள்ளனர்.  நல்லவேளை பெண்ணைத் திரும்பச் செய்வதற்கு வசதியாக, கொண்டையில் காலிங் பெல் எதையும் வைக்கவில்லை.. விட்டால் அதையும் செய்திருப்பார்கள் போல.. ! திடீரென்று பார்த்தால், காந்தாரா படத்தில் வருவது போல இருக்கு.. இப்படியா "பேய்" மாதிரி பூக்களை வைத்து "பேட்ச்  அப்" செய்வது.. அந்தப் பெண்ணை சிம்பிளாக மேக்கப் செய்திருந்தாலே லட்சணமாக இருந்திருக்கும் போல.. ஆனால் இது ரொம்ப ஓவரா இருக்குய்யா என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.


சரி வந்தது வந்துட்டீங்க.. இந்த பூக்களைப் பத்தி கொஞ்சம் கேட்டுட்டு போங்க!




பெண்களின் கூந்தல்  தான் பெண்களுக்கு அழகு. அந்த கார் கூந்தலுக்கு அழகு சேர்ப்பது பூக்கள் தான். அது மட்டுமல்லாமல் பூ என்பது பெண்களுக்கு மங்களகரமான பொருள். அந்த வகையில் வகையில் நல்ல காரியங்களுக்கு செல்லும்போது பெண்கள் தலையில் பூக்களை வைத்து செல்கிறார்கள். தலை நிறைய பூவுடன் ஒரு பெண்ணைப் பார்க்கும்போது, அடடா.. என சொல்லும் அளவுக்கு அந்தப் பெண்ணின் முகத்தில் களை வந்து விடுகிறது.. அழகு கூடி விடுகிறது.


பெண்ணுக்கும், பூவுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. இயற்கையாகவே பூக்கள் மிகவும் மென்மையானவை . அதுபோல பெண்களின் மனமும் மென்மையானது. பூக்கள் மணம் வீசக் கூடியது. பெண்களின் கார் கூந்தலும் இயற்கையாகவே மணம் வீசக்கூடியது. பெண்களின் குணத்தை எப்படி கையாளுகிறோமோ அதுபோல பூக்களையும் கையாள வேண்டும். இந்த இரண்டையும் சரியாக கையாளவில்லை என்றால் இரண்டுமே வாடிவிடும்.. இப்படியும் சொல்கிறது இலக்கியங்கள்!


இது மட்டுமல்லாமல் இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கு.. எல்லா உறவுகளிலும் அடிப்படை எது என்றால் அது "அன்பு அல்லது காதல்".. தான். அது இல்லாமல் இந்த உலகில் ஒரு அணு கூட இயங்காது. அப்படி அன்பையும், காதலையும் வெளிப்படுத்துவதற்கும் பூக்களே ஆதாரமாக விளங்குகிறது. தலைவன் தன் காதலை வெளிப்படுத்த தலைவிக்கு மிக விலை உயர்ந்த பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 2 முழம் மல்லிப் பூ வாங்கிக் கொடுத்தாலே போதும். தலைவன் கொடுக்கும் பூவுக்கு மயங்காத தலைவியே கிடையாது.  இதெல்லாம் இன்னிக்கு நேத்திக்கு இல்லைங்க.. சங்க காலத்திலிருந்தே பாரம்பரியமாக தொன்றுதொட்டு வரும் வழக்கம்தான்.


பூவா.. தலையா.. போட்டா தெரியும்.. நீயா.. நானா .. பார்த்துவிடு .. இப்படி ஒரு பாட்டு இருக்கிறது. அதை ஏன் அப்படிச் சொல்றாங்க தெரியுமா..  எந்த ஒரு போட்டியிலும், செயலிலும் யார் முதலில் வருவது என்பதை தீர்மானிப்பது நாணயம் தான். அந்த நாணயங்களில் பூ, தலை என இரு பக்கம் உள்ளது. நாணயத்தில் பூ என்பது பெண்னை குறிக்கும். தலை என்பது தலைவன் அதாவது ஆண்களை குறிக்கும். ஆண் முதலில் வருவானா அல்லது பெண் முதலில் வருவாளா என்பதற்காகவே இப்பாடல் வரி அமைந்ததாம். இப்படி நாணயங்களிலேயே பெண்ணுக்கு பதில் பூவைதான் வைத்தார்கள்.


இப்படி பெண்களுக்கும் பூக்களுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது.  ஆனால் அமிர்தமே ஆனாலும் அளவு இருக்குதானே.. அளவுக்கு மிஞ்சினால் நஞ்சுதானே.. எனவே எதுவாக இருந்தாலும் தேவையான அளவிற்கு பயன்படுத்தினா்தான் அழகு.. அளவு மீறினால் முகச் சுளிப்பே வரும்.. அது அழகான பூவாகவே இருந்தாலும்!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்