திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று அரோகரா கோஷம் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலை கோவில் கார்த்திகை தீபத்திருவிழா உலக பிரசித்தி பெற்ற விழாவாகும். இந்த திருவிழாவிற்கு பிற மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இருந்து பக்தர்கள் வந்து கலந்து கொள்வர். கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்தல் மற்றும் கார்த்திகை தீபத்திருநாள் தான் அனைவருக்கும் தெரிந்தது.
கார்த்திகை மாதம் நடைபெறும் தீபத்திருநாள் அன்று வீடுகள் மற்றும் கோவில்களில் விளக்கேற்றி வழிபாடு செய்து கொண்டாடுவர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் விளங்குகிறது. திருக்கார்த்திகை தீப திருவிழாவிற்காக அண்ணாமலையார் திருக்கோவிலில் கொடியோற்றத்துடன் திருவிழா தொடங்குவது வழக்கம்.
அந்த கொடியோற்ற நிகழ்வு பக்தர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. அண்ணாமலையார் முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. கொடி ஏற்றியதும் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தர்கள் முழங்கினர். இன்று அதிகாலை சுமார் 5.31 மணியளவில் கொடியேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு அரோகரா கோஷ மிட்டதுடன் சாமி தரிசனமும் செய்து வழிபட்டனர். இன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு இவ்விழா நடைபெறும். திருவிழாவில் காலை மாலை சாமி வீதி உலா நடைபெறும். முக்கிய நிகழ்வாக வருகிற நவம்பர் 22ம் தேதி இரவு வெள்ளி ரதத்தில் சாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்.
நவம்பர் 23ம் தேதி மகா தேரோட்டமும், நவம்பர் 26ம் தேதி அதிகாலை திருக்கோவில் முன்பு அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும்.
இந்த 10 நாட்களும் திருவண்ணாமலை விழாக் கோலம் பூண்டிருக்கும். இந்த திருவிழாவில் லட்சக்கானக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த விழாவிற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 5000த்திற்கும் அதிகமானவர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக கார்த்திகை தீபத்தன்று 3,500 சிறப்பு பேருந்துகள் இயக்கவும் போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}