திருவண்ணாமலை.. மலை மீது ஏற்றப்பட்டது மகாதீபம்.. விண்ணைத் தொட்ட அண்ணாமலைக்கு அரோகரா கோஷம்!

Dec 13, 2024,06:01 PM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில் தற்போது 2660 அடி உயர மலையில் ராட்சத கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மகாதீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து ஓம் நமச்சிவாயா, சிவாய நமஹ உள்ளிட்ட கோஷங்களை முழங்கி லட்சக்கணக்கான பக்தர்கள் தீப தரிசனம் செய்து மகிழ்ந்தனர். மலை மீது தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுதும் மக்கள் வீடுகளிலும் தீபம் ஏற்றி வழிபட்டனர்.


கடந்த வாரத்திற்கு முன்பாக ஃபெஞ்சல் புயலால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மிக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால்  கார்த்திகை தீபம் ஏற்றப்படும் பகுதியான அரைமலை எனப்படும் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் நான்கு குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர். இது அப்பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால், கார்த்திகை தீபம் ஏற்றப்படும் அன்று மலையில் பக்தர்களை அனுமதிப்பது பாதுகாப்பானதாக இருக்குமா எனக் கேள்வி எழுந்தது. 


இதனை அடுத்து 8 பேர் கொண்ட நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டது. இதில் கார்த்திகை தீபம் ஏற்ற செல்லும் மலைப்பாதையில்  சேறும் சகதியுமாகவும் வழுக்கும் நிலையில் இருப்பதால்  2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களை மலைக்கு செல்ல அனுமதிப்பது மிக கடினம் என அக்குழுவினர் அறிக்கை வெளியிட்டது.




இதனை தொடர்ந்து தற்போது மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாகவே திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் பரவலாக கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் மலைப்பாதைகளில் மேலும் பாதைகள் மோசமாகி உள்ளன. இதனால் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் மலைப்பாதைகளில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.


இந்த நிலையில், சுமார் 6 அடி உயரம், 350 கிலோ எடை கொண்டு பஞ்சலோகத்தால் வடிவமைக்கப்பட்ட  ராட்சத கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நேற்றே மழையை கூட பொருட்படுத்தாமல் கோவில் ஊழியர்கள் அதனை மலைக்கு கொண்டு சென்று தயார் நிலையில் வைத்தனர். 


திருவண்ணாமலை அண்ணாமலையார் தீபத்திருவிழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்தாவது நாளான இன்று காலை கார்த்திகை தீபத் திருநாளான டிசம்பர் 13 ஆம் தேதி கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த பரணி தீபத்தை காண கோயிலின் உள்ளே 7,500 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல் மாலையில் ஏற்றப்படும் மகாதீபத்தை காண கோவிலுக்குள் 11,500 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.


இந்த நிலையில் இன்று மாலை 6 மணியளவில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்பறப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த ராட்சத கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டது. பெரும் சவால்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக தீபம் ஏற்றப்பட்டதால் திருவண்ணாமலையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பலர் கண்ணீர் வழிய வணங்கி வழிபட்டனர்.


திருவண்ணாமலை கோவில் முழுவதும் வண்ண வண்ண மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் கோவில் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. இதனால் கோவில் கோபுரங்கள் மின்னொளியால் ஜொலிக்கின்றன. இதனைக் காண நேற்று இருந்தே திருவண்ணாமலையில் பக்தர்கள் வருகை தர ஆரம்பித்தனர். 


தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக 14,000 அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தகவல் தெரிவித்திருந்தனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்