திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில் கருவறையில் இன்று அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்து வழிபட்டனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடந்து வருகிறது. இன்றுதான் இதில் முக்கியமான நாள். காலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்படும். மகா தீபம் ஏற்றப்பட்டதும்தான் தமிழ்நாடு முழுவதும் மக்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றி வைத்து வழிபடுவார்கள்.
அந்த வகையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு அண்ணாமலையார் கோவில் கருவறையில் பரணி தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. பரணி நட்சத்திர நாளில் இந்தத் தீபம் ஏற்றப்படுவதால் இதற்கு பரணி தீபம் என்று பெயர் வந்தது. இன்று முதல் 3 நாட்களுக்கு தினசரி மாலையில் வீடுகளில் விளக்கேற்றி வைப்பார்கள்.
இதைத் தொடர்ந்து அடுத்து மாலை 6 மணி அளவில் திருவண்ணாமலை தீப மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. கிட்டத்தட்ட 2700 அடி உயரம் கொண்ட இந்த மலையில் இதற்காக ராட்சத கொப்பரையை நேற்றே வைத்து விட்டனர். கொட்டும் மழையிலும் இந்தப் பணி நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டு வருகின்றனர். மாலை மகா தீப தரிசனத்திற்காக அவர்கள் காத்துள்ளனர்.
மகா தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகள், பார்க்கிங் வசதிகள், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் முழுவதும் தீப ஒளியால் ஜொலித்துக் கொண்டுள்ளது. திருவண்ணாமலை நகரமும் கூட விழாக் கோலம் பூண்டுக் காணப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சீனாவில் மீண்டும் ஒரு கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. வவ்வாலிலிருந்து மனிதர்களுக்கு பரவுமாம்!
2000 கோடி அல்ல.. 10000 கோடியே கொடுத்தாலும் சரி.. கையெழுத்துப் போட மாட்டோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
பிரதமர் நரேந்திர மோடியின்.. முதன்மைச் செயலாளரானார்.. சக்திகாந்த தாஸ்.. ஓய்வுக்குப் பின் புதுப் பதவி!
தான் யார்.. எதற்காக வந்தோம் என்பதே கமல்ஹாசனுக்குப் புரியலையே.. தவெகவின் அதிரடி தாக்கு!
பிப்., 26ல் தவெகவின் ஆண்டு விழா.. 2000 பேருக்கு மட்டும் தான் அனுமதி..!
சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா vs பாகிஸ்தான்.. நாளைக்கு ஜெயிக்காம விட்ரக் கூடாதுடா பரமா!
அனல் பறக்கும் பேச்சாளர்.. அதிரடி டிபேட்டர்.. நாம் தமிழர் கட்சியின் அடையாளம்.. யார் இந்த காளியம்மாள்?
தங்கச்சி காளியம்மாள் விலகுவதாக இருந்தால் விலகிக்கலாம்.. ரொம்ப நன்றி என்று சொல்வோம்.. சீமான்
சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள்.. நாம் தமிழர் கட்சிக்கு முழுக்கா?.. பரபரக்கும் இன்விடேஷன்!
{{comments.comment}}