திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை.. 4 மையங்களில் புகுந்து.. ரூ. 75 லட்சம் கொள்ளை!

Feb 12, 2023,10:29 AM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்து நான்கு ஏடிஎம் மையங்களில் புகுந்து மெஷின்களை உடைத்து ரூ. 75 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே இயந்திரத்திலிருந்து மட்டும் ரூ. 31 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றுள்ளனர்.


நேற்று இரவு நடந்த இந்த சம்பவம் தமிழ்நாடு காவல்துறைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட  ஏடிஎம் மையங்களில் 3 பாரத ஸ்டேட் வங்கிக்குச் சொந்தமானதாகும். இன்னொரு ஏடிஎம் மையம் இந்தியா ஒன் ஏடிஎம் மையமாகும்.


திருவண்ணாமலை நகரில் உள்ள மாரியம்மன் கோவில் 10வது தெருவில் உள்ள இயந்திரத்தை கேஸ் வெல்டிங் மூலம் திருடர்கள் உடைத்துள்ளனர். பின்னர் அதிலிருந்த ரூ. 20 லட்சம் பணத்தை திருடிக் கொண்டு, மெஷினையும் எரித்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.


போளூர் ரயில் நிலையப் பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்து  ரூ. 19 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர். அதேபோல திருவண்ணாமலை பஸ் டெப்போ அருகே உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த மெஷினை உடைத்து  அதிலிருந்து ரூ. 31 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.


ஈரான் பெண்ணை பலாத்காரம் செய்தாரா ராக்கி சாவந்த் கணவர்?.. மைசூரில் வழக்கு!


இதேபோல கலசப்பாக்கம் பகுதியில் இந்தியா ஒன் ஏடிஎம் மையம் உள்ளது. அங்கு புகுந்த கொள்ளையர்கள் அதில் இருந்த ரூ. 2.50 லட்சம் பணத்தை திருடிக் கொண்டு மெஷினையும் உடைத்து விட்டு தப்பியுள்ளனர். ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து ஒரே மாவட்டத்தில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நிச்சயம் திட்டமிட்ட கொள்ளையாக கருதப்படுகிறது. மேலும் ஒரே கும்பல் தேதி குறித்து இதில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.


நீண்ட நாட்களாக இந்த ஏடிஎம் மையங்களை நோட்டம் பார்த்து அழகாக திட்டமிட்டு இதை கொள்ளையர்கள் அரங்கேற்றியிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது. கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது வட மாநிலக் கொள்ளைக் கும்பலாக இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த கொள்ளைச் சம்பவத்தைத்தொடர்ந்து மாவட்ட போலீஸார் பல்வேறு தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.


சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்