திருவள்ளுவர் தினம்.. 9 பேருக்கு விருதுகள் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் கெளரவித்தார்!

Jan 15, 2025,11:03 AM IST

சென்னை: திருவள்ளுவர் தினத்தையொட்டி 9 முக்கியப் பிரமுகர்களுக்கு விருதுகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் கெளரவித்தார்.


திருவள்ளுவர் தினம் ஆண்டு தோறும் ஜனவரி 15ம் தேதி தமிழ்நாடு அரசால் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று திருவள்ளுவர் ஆண்டு 2056 பிறக்கிறது. திருவள்ளுவர் ஆண்டை எப்படி கணக்கிட வேண்டும் என்றால், ஆங்கில வருடத்துடன் 31 வருடங்களைக் கூட்டிக் கொண்டால் வருவதுதான் திருவள்ளுவர் ஆண்டாகும். கடந்த 1971ம் ஆண்டு முதல் இது அமலில் இருந்து வருகிறது.


ஒவ்வொரு திருவள்ளுவர் தினத்தன்றும் தமிழ்நாடு அரசு 9 துறைகளில் விருதுகளை வழங்கிக் கெளரவித்து வருகிறது. அதன்படி  2025-ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது, 2024-ஆம் ஆண்டிற்கான மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது, முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, பேரறிஞர் அண்ணா விருது, தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது ஆகிய 9 விருதுகளுக்குரிய பிரமுகர்கள் அறிவிக்கப்பட்டனர்.




சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த 9 பேருக்கும் விருதுகளை வழங்கினார். அதன்படி, 2025ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது பெரும் புலவர் மு.படிக்கராமு்கு வழங்கப்பட்டது. 


2024ம் ஆண்டுக்கான மகாகவி பாரதியார் விருது கவிஞர் கபிலன், பாவேந்தர் பாரதிதாசன் விருது பேரொளி பொன். செல்வகணபதி, தமிழ்த் தென்றல் திரு.வி.க விருது - டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது - வே.மு. பொதியவெற்பன், தந்தை பெரியார் விருது - விடுதலை ராஜேந்திரன், பேரறிஞர் அண்ணா விருது எல். கணேசன், அண்ணல் அம்பேத்கர் விருது விசிக எம்பி ரவிக்குமார், முத்தமிழறிஞர் கலைஞர் விருது முத்துவவாசி ஆகியோருக்கு அளிக்கப்பட்டது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Exclusive: புதுமையான பட்டாசு.. படபடன்னு வெடிக்கும்.. வெடிச்சதும் விஜய் உருவம் வரும்.. சபாஷ் சபாபதி!

news

ஜனவரி 18, 19.. மிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. மஞ்சள் அலர்ட்!

news

லெப்ட்ல குட் பேட் அக்லி.. ரைட்ல ரெட்ரோ.. நெட்பிளிக்ஸ்காரன் சம்பவம் பண்ணிட்டான் மாப்ளை!

news

திருவள்ளுவர் தினம்.. 9 பேருக்கு விருதுகள் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் கெளரவித்தார்!

news

அரிட்டாபட்டியைக் காப்பாற்றுங்கள்.. டங்ஸ்டன் சுரங்கம் வேண்டாம்.. பாலமேடு ஜல்லிக்கட்டில் பதாகை!

news

நீதி கேட்டு போராடிய பெண்களை.. நடப்பது மக்களாட்சியா, போலீஸ் ஆட்சியா?.. அன்புமணி ராமதாஸ்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 15, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Makara Jyothi 2025: சாமியே சரணம் ஐயப்பா.. சபரிமலையில் மகரஜோதி .. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

news

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு.. 19 காளைகளை அடக்கிய திருப்பரங்குன்றம் கார்த்திக்.. கார் பரிசு!

அதிகம் பார்க்கும் செய்திகள்