மார்கழி 11 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 11.. செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்!

Dec 25, 2024,04:46 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருப்பாவை பாசுரம் 11 :


செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!

புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,

சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,

சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ

எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.




பொருள் :


கன்றுக்குட்டிகளுடன் இருக்கும் கறவை பசுக்கள் சுரக்கின்ற பாலினை கறக்கும் தொழில் செய்பவர்கள் ஆயர்குலத்தினர். அது மட்டுமல்ல தேடி வரும்  பகைவர்கள் எவ்வளவு பலசாலிகளாக இருந்தாலும் அவர்களை போரிட்டு வெற்றிக் கொள்ளும் திறமை கொண்டவர்கள். அப்படிப்பட்ட குற்றமில்லாத பசுக்களை வைத்திருக்கும் குலத்தில் தோன்றிய கொடி போன்ற உடலை உடைய பெண்ணே!புற்றில் இருக்கும் பாம்பு படம் எடுத்தது போல் பறந்த நெற்றியையும், மயில் தோகை விரித்தது போன்ற நீண்ட கூந்தலையும் உடையவளே. நீ இப்படி தூங்கிக் கொண்டிருப்பது சரி தானா? சுற்றி உள்ள வீடுகளில் இருக்கும் அனைத்து தோழிகளும் வந்து உன்னுடைய வீட்டின் முன் வந்து நின்று கொண்டிருக்கிறார்கள். உன்னுடைய வீட்டின் வாசலுக்கு வந்து, மழையை பொழிந்திடும் கருமையான மேகங்களை போல் பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்திடும் கண்ணனின் திருநாமங்களை பாடிக் கொண்டிருக்கிறார்கள். வீட்டில் மிகுந்த செல்வ செழிப்புடன் செல்லமாக வளர்க்கப்படும் செல்வந்தரின் பெண்ணாகிய நீ இப்படி பேசாமல் இருக்கலாமா? எழுந்து வந்து எங்களுடன் சேர்ந்து நீயும் கண்ணனின் பெருமைகளை போற்றி பாடிடு பெண்ணே.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்