திருப்பள்ளியெழுச்சி பாடல் 01.. "போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே புலர்ந்தது"

Jan 06, 2024,09:10 AM IST

திருப்பள்ளியெழுச்சி பாடல் 01 : 


போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே புலர்ந்தது

பூங்கழற்கு இணைதுணை மலர் கொண்டு

ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை

கொண்டு நின் திருவடி தொழுகோம்

சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே

ஏற்றுயர் கொடியுடையாய் எவை உடையாய்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே




பொருள் : 


என்னுடைய வாழ்க்கையின் அடிப்படை பொருளாக விளங்கும் பெருமானே உன்னுடைய திருவடிகளை வணங்கிறேன்.  பூ போன்ற உன்னுடைய திருவடிகளில் அதற்கு இணையான பூக்களை சாத்தி வழிபட நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். அவற்றை ஏற்றுக் கொண்டு உன்னுடைய திருமுகத்தில் மலர்ந்திருக்கும் சிரிப்பை பார்த்த ஆனந்தத்தில் உன்னுடைய திருவடிகளை விழுந்து வணங்குகிறோம்.


குளம் முழுவதும் நிரம்பிய நீரால் இருக்கும் சேற்றில் மலர்ந்திருக்கும் செந்தாமரை மலர்கள் நிறைந்த அழகிய குளங்களையும், வயல்களால் சூழப்பட்ட திருப்பெருந்துறை தலத்தில் குடிகொண்டிருக்கும் சிவ பெருமானே, உயர்த்திக் கட்டப்பட்ட கொடியில் எருது சின்னத்தினை கொண்டவனே, எம்மை ஆட்கொண்ட பெருமானே, தூக்கத்தில் இருந்த எழுந்து கொள்ள வேண்டும்.


விளக்கம் : 


திருவெம்பாவையின் 20 பாடல்களில் உலகத்தில் உள்ள உயிர்களை அனைத்தையும் மாயை எண்ணும் தூக்கத்தில் இருந்த எழுந்து கொள்ளும் படியும், சிவ பெருமானின் பெருமைகளை பாடி பக்தி செய்ய வருமாறும் அழைத்தார் மாணிக்கவாசகர். திருவெம்பாவையின் இறுதியில் இறைவனிடம் முழுவதுமாக சரணாகதி அடைந்தார். இதைத் தொடர்ந்து திருப்பள்ளியெழுச்சி பாடலில் சிவ பெருமானை துயில் எழுப்பி, அருள் செய்யும் படி கேட்கிறார். 


திருப்பள்ளியெழுச்சியின் முதல் பாடலின் துவக்கத்திலேயே எங்களுக்கு எல்லாமே நீ தான் என இறைவனிடம் தன்னை முழுவதுமாக ஒப்படைத்து விட்டார். உலக உயிர்களை எல்லாம் காப்பாற்றுபவனாகி இறைவனின் மென்மையான மலர்களுக்கு ஒப்பாகவும், அவர் கோவில் கொண்டிருக்கும் திருப்பெருந்துறை தலம் எத்தனை பசுமையான இயற்கை வளங்கள் நிறைந்த இடமாக உள்ளது என்றும் வர்ணித்துள்ளார். சிவ பெருமானை உலகத்தை ஆளும் அரசன் எனக் குறிப்பிட்டு, கொடியில் நந்தியை அடையாள சின்னமாக கொண்டவனே என்றும் புகழ்கிறார்.

சமீபத்திய செய்திகள்

news

பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

news

Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!

news

14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!

news

மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!

news

Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்