திருநெல்வேலி சீமையிலே.. நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம்.. பக்தர்கள் கோலாகலம்!

Jun 21, 2024,09:05 PM IST

திருநெல்வேலி: புகழ் பெற்ற, திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.


திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் தமிழகத்தில் உள்ள சிறப்பு மிக்க கோவில் தலங்களில் ஒன்றாகும். மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வந்தாலும், ஆனி மாசம் நடைபெறும் ஆனித் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவ்வாண்டிற்கான திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், காலை மற்றும் இரவில் சுவாமி- அம்பாள் வீதிஉலா மற்றும் பக்தி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.




விழாவின் 8ம் நாள் நிகழ்ச்சியில் காலை 8 மணிக்கு சுவாமி நடராச பெருமாள் வீதியுலாவும், மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதியுலாவும், இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் வீதியுலாவும், சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்மன் தங்கக்கிளி வாகனத்திலும் திருவீதியுலா வெகு சிறப்பாக நடைபெற்றது.


இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரேட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை அம்மன் தேரில் எழுந்தருளினார். இந்த தேரோட்ட நிகழ்ச்சியை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இந்த தோரோட்டத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். இவ்விழாவில் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். 147 கண்காணிப்பு கேமராக்கள் கோவிலின் உட்புறமும் வெளிபுறமும் பொறுத்தப்பட்டுள்ளன.




பக்தர்களின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.மருத்துவ குழு, நடமாடும் கழிப்பறைகள் என்று பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த தேரோட்டத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும்  இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.


500 ஆண்டுகளாக நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் மிகப் பழமையான தேரோட்ட வைபவங்களில் நெல்லையப்பர் கோவில் தேரோட்டமும் முதன்மையானது என்பது நினைவிருக்கலாம்.


புகைப்படங்கள்: காயத்ரி கிருஷாந்த்

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்