டாஸ்மாக் விவகாரம்... பாஜக போராட்டத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் வரவேற்பு!

Mar 17, 2025,04:30 PM IST

சென்னை: டாஸ்மாக்குக்கு எதிராக பாஜகவின் நடத்தும் போராட்டத்தை வரவேற்கிறோம். மதுவுக்கு எதிராக யார் போராட்டம் நடத்தினாலும் வரவேற்போம். மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக்கில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைக்கு பின்னர் அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி வரையில் ஊழல் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில் பாஜக கட்சி சார்பில் இன்று சென்னையில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் மற்றும் அக்கட்சியை சேர்ந்த பலரும் போலீசாரால்  கைது செய்யப்பட்டனர். அப்போது அண்ணாமலை கூறுகையில், எங்களை பொறுத்தவரை அடுத்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். 

அடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு தேதி சொல்ல மாட்டேன். காவல்துறைக்கு மரியாதை கொடுத்து தேதி அறிவித்திருந்தோம். ஆனால் அவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள் என்றால் ஒரு அரசியல் கட்சியா நாங்களும் வேற ஸ்டைலில் செய்ய ஆரம்பிப்போம் என்று தெரிவித்திருந்தார்.




இந்நிலையில், டாஸ்மாக் விவகாரத்தை கண்டித்து பாஜக முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திலைவர் திருமாவமவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,


இந்த பேராட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். மதுபான கடைகள் ஒழிக்கப்பட வேண்டும். மூடப்பட வேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டிற்காக குரல் கொடுக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அது அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்ற ஒரு உத்தியாக கையாள்கிறார்கள் என்றால் அதில் அவர்கள் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது. பாஜக ஆளும் மாநிலங்களில் மது ஒழிப்பை அமல்படுத்தினால் வரவேற்கலாம், பாராட்டலாம். கூட்டணி கட்சியாக இருந்தாலும், தோழமை கட்சியாக இருந்தாலும் தேர்தல் வாக்குறுதியில் கூறிய படி, திமுக அரசு மது ஒழிப்புக்கொள்கையில், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்