களை கட்டிய 3வது கட்ட லோக்சபா தேர்தல்.. குஜராத்தில் ஓட்டுப் போட்ட பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா

May 07, 2024,05:19 PM IST
குஜராத்: இன்று 3ஆம் கட்ட மக்களவை தேர்தலை முன்னிட்டு குஜராத்தில் ஓட்டு போட்டார் பிரதமர் மோடி. அதேபோல மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, மான்சுக் மாண்டவ்யா ஆகியோரும் குஜராத்தில் வாக்களித்தனர்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் ஏப்ரல் 19ம் தேதி மற்றும் ஏப்ரல் 26ம் தேதிகளில் 2 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று  3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதோத்தில் உள்ள 93 தொகுதிகளில் இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்தினர். குஜராத்தில் 25 தொகுதிகள், கர்நாடகத்தில் 14, மகாராஷ்டிரத்தில் 11, உத்தர பிரதேசத்தில் 10, மத்திய பிரதேசத்தில் 9, சத்தீஸ்கரில் 7, பிகாரில் 5, அஸ்ஸாம் 4, கோவாவில் 2, மேற்கு வங்கத்தில் 4, தாத்ரா-நகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ யூனியன் பிரதேசத்தில் 2 தொகுதிகள் என மொத்தம் 93 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்துடன் 284 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைகிறது. அதாவது மொத்தம் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் பாதிக்கும் மேலான தொகுதிகளில் இன்றுடன் தேர்தல் முடிகிறது.



பிரதமர் மோடி இன்று குஜராத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார். காந்திநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து காலை புறப்பட்ட பிரதமர், அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்தினார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் அதே பள்ளியில் வாக்கு, அவரும் அங்கேயே வாக்கு பதிவு செய்தார். வாக்குப்பதிவிற்கு முன்னர் பிரதமர் மோடி தனது இணையதள பக்கத்தில், இன்றைய தேர்தலில் வாக்களிக்கும் அனவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். வாக்காளர்களின் தீவிர பங்கேற்பு நிச்சயமாக தேர்தலை விறுவிறுப்பாக மாற்றும் என்று தெரிவித்திருந்தார்.

அடுத்து மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1ம் தேதி மீதமுள்ள நான்கு கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. ஜூன் 4ம் தேதி வாக்குகள் என்னப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

சமீபத்திய செய்திகள்

news

வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு

news

தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!

news

வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

news

Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!

news

Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..

news

அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!

news

கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!

news

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!

news

தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்