தனுஷ் போட்ட வழக்கு.. நாங்கள் எந்த விதி மீறலிலும் ஈடுபடவில்லை.. நயன்தாரா-விக்னேஷ் சிவன் பதில்!

Nov 29, 2024,05:16 PM IST

சென்னை: நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்தவில்லை. நாங்கள் விதி மீறலில் ஈடுபடவில்லை என நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில், நயன்தாராவின் பிறந்த நாளையொட்டி கடந்த 18ம் தேதி 'beyond the fairytale' என்ற தலைப்பில் வெளியானது. இதில் நயன்தாரா- விக்னேஷ் சிவனுடனான வாழ்க்கை பற்றி விரிவாக காண்பிக்கப்பட்டது.




இந்த ஆவண படத்துக்காக, நடிகர் தனுஷின் வொண்டர் பார் சினிமா தயாரிப்பு நிறுவனம் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நடிகை நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து நடிகர் தனுசுக்கு எதிராக அறிக்கை ஒன்றை நயன்தாரா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார். இந்த சம்பவம் அனைத்து தரப்பினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


இந்தநிலையில், நயன்தாராவுக்கு எதிராக வொண்டர்பார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குமாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தபோது இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி நயன்தாரா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டார்.


இந்த நிலையில் தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நானும் ரவடி தான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்தவில்லை. நாங்கள் விதி மீறலில் ஈடுபடவில்லை. பதிப்புரிமை மீறல் எதுவும் நடக்கவில்லை. இதில் தனிப்பட்ட காட்சிகள் மட்டும் இடம் பெற்றுள்ளன. இது ஒரு மீறல் அல்ல என்று நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் சார்பாக வழக்கறிஞர் பதில் தெரிவித்துள்ளார். தனுஷ் தொடர்ந்த இந்த வழக்கு டிசம்பர் 2ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்