சிட்னி: வேலை நேரம் முடிந்த பிறகு, முதலாளி போன் செய்தால், அதை நிராகரிக்கும் வகையிலான புதிய சட்டத்தை ஆஸ்திரேலியா அரசு கொண்டு வந்துள்ளது.
வளர்ந்த நாடு, வளரும் நாடு என அனைத்து நாடுகளிலும் தொழிலாளர்கள் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றால் கூட, சில அவசர வேலைகளுக்காக வேலை பார்க்கும் நிலை உள்ளது. சில வேலைகளை வீட்டில் இருந்து செய்து கொடுப்பதும்,சில வேலைகளுக்காக மீண்டும் அலுவலகத்திற்கு சென்று அந்த வேலையை முடித்துக் கொடுக்கும் நிலையும் ஏற்படும்.
இது கூட பரவாயில்லை பாஸ்.. இதை விட கொடுமையெல்லாம் நடக்கும் பாருங்க.. ஹய்யோ.. !
சிலர் மனைவி குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு போக வேண்டிய சூழல் ஏற்படும் போது மற்றும் குழந்தைகளுடன் ஜாலியாக எங்காவது போக முடிவு செய்திருக்கும் நேரத்தில் கூட அலுவலகத்தில் இருந்து போன் வந்து அழைக்கப்படுவதும் உண்டு. "அதை மட்டும் முடிச்சுக் கொடுத்துட்டு போங்க" என்று பாஸ் சொல்லும்போது காதுகளில் புகை வரும் நம்மவர்களுக்கு.
வார விடுமுறை நாட்களிலும் கூட வேலை பார்க்கும் நிலை ஒரு சிலருக்கு ஏற்படுவதும் உண்டு. இது தவிர்க்க முடியாத நிலையாக மாறிவிட்டது. இது போன்ற பிரச்சனைகள் குடும்பத்தில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடுவதும் உண்டு. எப்பப் பார்த்தாலும் வேலை வேலை வேலைதானா.. அப்பறம் எதுக்கு என்னைய கட்டுனீங்க.. என்று மனைவியர் அலுத்துக் கொள்ளும் குடும்பங்களை நிறையவே பார்க்கலாம்.
தற்பொழுது ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அது என்னன்னு தெரியுமா? வேலை நேரம் முடிந்தவுடன் முதலாளியின் போனை அட்டென்ட் பண்ண தேவையில்லை. அதுமட்டும் இல்லாமல் மெசேஜ் வந்தாலும் அதற்கும் பதிலளிக்கவும் தேவையில்லையாம். மேலும் இது தொடர்பாக ஏதேனும் பிரச்சனை எழுந்தால் கூடஆஸ்திரேலியாவின் வேலை ஆணையத்திடம் முறையிட்டு, இறுதி முடிவு எடுக்கலாம் என பசுமை கட்சி முன்மொழிந்துள்ளது.
இதை அறிந்த தொழிலாளர்கள் படு குஷியாகி விட்டார்களாம். பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் இந்த சட்டம் உள்ள நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது. இந்த சட்டம் இன்னும் ஒரு வாரத்தில் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில், பணியின் போது பயன்படுத்தும் மொபைல் போனை பணி முடிந்தவுடன் சுவிட் ஆப் செய்து கொள்ளும் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதும் நாம் அறிந்ததே.
அப்பறம்.. எப்ப நம்ம நாட்டுக்கு இந்த சட்டம் வரும்னு நம்மாட்களுடைய மைன்ட் வாய்ஸ் இங்க வரைக்கும் கேக்குது.. வரும் வரும்.. கவலைப்படாம பொறுமையா இருங்க!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
மாற்றுத்திறனாளிகள் குறித்த சர்ச்சை பேச்சு...வருத்தம் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன்
காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டை கண்டித்து.. தீர்மானங்களை கொண்டு வாங்க பார்ப்போம்..எடப்பாடி பழனிச்சாமி சவால்
அமித்ஷா பிரஸ்மீட் மேடையில் திடீர் Change.. டிஜிட்டல் பேனரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெயர் நீக்கம்
திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கம்... புதிதாக திருச்சி சிவா நியமனம்!
அமித்ஷாவை சந்திக்கும் அதிமுக தலைவர்கள்.. தேமுதிகவுக்கு டைம் கொடுக்க மறுத்ததா பாஜக?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 11, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
கலக்கும் குட் பேட் அக்லி.. புஷ்பா பட இயக்குனர் சுகுமார் படத்தில் அஜித் நடிப்பாரா..?
Panguni Utthiram.. பங்குனி உத்திரம் இன்று.. 12ம் தேதி முழு நிலவு.. மிக மிக சிறப்பு!
{{comments.comment}}