சென்னை: துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பாக அரசுடன் எந்தவித அதிகார மோதலும் இல்லை. ஆளுநர் மாளிகை மற்றும் அரசு இடையே அதிகார மோதல் என வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர் அதனை கிடப்பில் போட்டதாகக் கூறி தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 10 மசோதாக்களும் ஏற்றுக்கொண்டதாக கருதப்படும் என்று சில நாட்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிரடி தீர்ப்பை வழங்கியதோடு, ஆளுநருக்கு பல முக்கிய உத்தரவுகளையும் பிறப்பித்தது.
அந்த 10 மசோதாக்களில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன மசோதாவும் அடங்கும். இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஊட்டியில் துணைவேந்தர் மாநாடு நடத்த இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வரும் ஏப்ரல் 25,26,27 ஆகிய தேதிகளில் துணை வேந்தர்கள் மாநாடு ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இதில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆளுநர் மாளிகை இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் நடத்தப்படும் துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பாக சில ஊடகங்கள் தவறான தகவல்களை வழங்கி வருகின்றன. ஊடகங்களின் சில அறிக்கைகள், மாநில அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே அதிகாரப் போராட்டம் இருப்பது போல காட்டுகின்றன. இந்தச் செய்திகள் முற்றிலும் தவறானவை. உயர்கல்வி நிறுவனங்களின் துணை வேந்தர்கள் கலந்து கொள்ளும் மாநாடு, 2022 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு ஆளுநர் தலைமையில் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் தங்களுடைய கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
மேலும், மாணவர்களுக்கு எழும் சவால்கள், வாய்ப்புகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி குறித்து ஆலோசித்து நமது மாநிலத்திற்கும் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் அந்தந்த நிறுவனங்களைத் தயார்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுக்கின்றனர். முன்னதாக, தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள் குறிப்பாக மாநில பல்கலைக்கழகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி இருந்தன. இந்த மாநாடு தான் அனைத்து கல்வி நிறுவனங்களும் ஒன்றுாேர்ந்து பணியாற்ற வழிவகுத்தன.
ஒவ்வொரு ஆண்டும் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கி நடைபெறுகின்றன. இந்த ஆண்டும் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் ஜனவரி மாதமே தொடங்கப்பட்டுவிட்டது. இதற்கான ஏற்பாட்டிற்காக பல கூட்டங்கள் நடத்தப்பட்டன. கற்றல், கற்பித்தல், புதுமை என கல்வி நிறுவனங்கள் சிறந்து விளங்கும் நோக்கில் நடைபெறும் இந்த துணைவேந்தர் மாநாட்டை அரசியல் நோக்கில் சில தவறான தகவல்கள் வருகின்றன. சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புடன் தவறாக இணைந்து, ஆளுநர் மாளிகைக்கும் மாநில அரசுக்கும் இடையிலான அதிகாரப் போராட்டமாக அதைக் காட்ட முயற்சித்து வருகின்றன. இந்தத் தகவல்கள் அவதூறானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு விரைவில் சரியான பதிலடி தரப்படும்.. அமைச்சர் ராஜ்நாத் சிங்
சையத் ஆதில் ஹுசைன் ஷா.. மக்களைக் காக்க தீவிரவாதியுடன் மோதி.. உயிர் நீத்த குதிரைப்பாகன்!
பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும்: விசிக தலைவர் திருமாவளவன்!
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில்.. உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி..!
இந்திய உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது..?காஷ்மீர் தாக்குதலுக்கு சீமான் கண்டனம்..!
காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு.. மத்திய அமைச்சர் அமித்ஷா அஞ்சலி!
அமலாக்கத் துறையின் டாஸ்மாக் ரெய்டுக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு தள்ளுபடி!
Pahalgam Terror Attack: தேனிலவு சென்ற இடத்தில்.. உயிரிழந்த கடற்படை அதிகாரி..!
பஹல்காம் தாக்குதல்.. 3 தமிழ்நாட்டவர் காயம்.. உயிரிழப்பு இல்லை.. தலைமைச் செயலாளர் முருகானந்தம்
{{comments.comment}}