தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அச்சம் தருகிறது.. தவெக தலைவர் விஜய் பேச்சு

Jun 28, 2024,05:36 PM IST

சென்னை:  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவன் என்ற முறையில் போதைப் பொருள் குறித்து எனக்கும் அச்சமாக உள்ளது. வருங்கால இளைஞர்கள் மாணவர்களாகிய நீங்க, செல்ஃப் கண்ட்ரோல் மற்றும் டிசிப்ளினை வளர்த்துக்கணும். Say no to temporary pleasures, say no to drugs என நீங்க எல்லோரும் உறுதிமொழி எடுக்க  வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்  கேட்டுக்கொண்டார்.


நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற  மாணவ மாணவிகளுக்கு கல்வி விருதுகளை இன்று வழங்கினார் நடிகர் விஜய். இந்த நிகழ்ச்சி சென்னை திருவான்மியூர் கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்றது. 


முதல் கட்டமாக 21 மாவட்டங்களில் பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு இன்று  தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விருது வழங்கினார். இதில் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் மேடையில் பேச தொடங்கினார். அப்போது கரவொலியால் அரங்கமே அதிர்ந்தது. சின்ன சிரிப்புடன் பேச ஆரம்பித்தார் விஜய். விஜய் பேச்சின் விவரம்:


நல்ல தலைவர்கள் தேவை




நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாவது தேர்வில் சாதனை படைத்த என்னுடைய தம்பி தங்கைகளுக்கும், இன்றைக்கு பெருமையுடன் வந்திருக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும், இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடத்த காரணமாக இருக்கும் எனது பொதுச் செயலாளர் மிஸ்டர் ஆனந்த் அவர்களுக்கும், மிஸ்டர் ராஜேந்திரன் அவர்களுக்கும், தமிழக வெற்றி கழகத்தின் தோழர்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் என் நண்பா, நண்பிகளுக்கும், உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். மீண்டும் ஒருமுறை எதிர்கால தலைமுறை இளம் மாணவ மாணவிகளான உங்கள் எல்லாத்தையும் சந்திப்பதில் ரொம்ப மகிழ்ச்சி. 


காலை முதலே எனக்கு பாசிட்டிவான எனர்ஜி கிடைத்து வருகிறது. உங்க முகங்களைப் பார்த்தது முதல் நல்லா ஒர்க்கவுட் ஆகிறது.  இது மாதிரி விழாவில் சின்னதா 2 நல்ல விஷயம் சொல்லணும். நீங்க எல்லாருமே அடுத்த கட்டத்தை நோக்கிப் போறீங்க. உங்களில் சிலருக்கு கிளியர் பிக்சர் இருக்கும். எதிர்காலத்தில் என்ன ஆகப்போறோம் என்பதில். அதுல சில பேருக்கு டெசிசன் மேக்கிங்கில் தொய்வு ஏற்படலாம். குழப்பம் ஏற்படலாம்.  எல்லாத் துறையும் நல்ல துறைதான். எதைத் தேர்ந்தெடுக்கறீங்களோ அதில் உங்களது 100 சதவீத உழைப்பைப் போட்டால் யாராக இருந்தாலும் வெற்றி நிச்சயம்தான். பிடித்ததை தேர்வு பண்ணுங்க. என்ன ஆப்ஷன்ஸ் இருக்குன்னு தெரிஞ்சுக்கங்க. பேரன்ட்ஸ் கிட்ட டீச்சர்ஸ் கிட்ட டிஸ்கஸ் பண்ணுங்க.  


உங்க எல்லாத்துக்கும் டாக்டர், இன்ஜினியர் என்ற எதிர்கால கனவு இருக்கும்.  முதலில் ஒரு துறையை தேர்ந்தெடுத்தால் அதில் என்ன டிமாண்ட் இருக்கு என்பதை பார்ப்போம்‌. உதாரணத்திற்கு மருத்துவம் பொறியியல் தான் நல்ல ஃபீல்டு என சொல்ல முடியாது. இங்க என்ன இல்லை. நமக்கு எது அதிகமா தேவைப்படுது, அப்படின்னா நல்ல தலைவர்கள். நான் தலைவர்கள் என சொன்னது அரசியல் ரீதியாக மட்டும் கிடையாது. நீங்க ஒரு துறைக்கு போறீங்க அதுல நீங்க சிறந்து விளங்கினீர்கள் என்றால் அதில் தலைமை என்ற இடத்திற்கு வர முடியும். அதற்கு தான் நான் நமக்கு நிறைய தலைவர்கள் தேவை என்று சொன்னேன்.


எதிர்காலத்தில் அரசியலும் ஏன் ஒரு கெரியராக வரக்கூடாது. வரணும் என்பது என்னுடைய விருப்பம். நல்லா படிச்சவங்க அரசியலுக்கு வரணுமா வேண்டாமா. நல்லா படிச்சவங்க தலைவர்களாக வரணுமா வேண்டாமா. (என விஜய் கேட்க அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது) நீங்க படிக்கும்போது மறைமுகமாகவே அரசியலில் ஈடுபட முடியும். டெய்லி நியூஸ் பேப்பர் படிங்க. படிக்க படிக்க உங்களுக்கே தெரியும். 


செய்திகளைத் தருவதில் பாரபட்சம்




ஒரே செய்தியை, ஒரு நியூஸ் பேப்பர் ஒரு மாதிரி எழுதுவாங்க. அதே செய்தியை இன்னொரு நியூஸ் பேப்பர் இன்னொரு மாதிரி எழுதுவாங்க . ஒரு செய்தியை ஒரு நியூஸ் பேப்பர்ல ஃப்ரண்ட் பேஜ்ல போடுவாங்க. அதே செய்தியை ஒரு நியூஸ் பேப்பர்ல கடைசி பக்கத்துல கூட போட மாட்டாங்க. இதை நீங்க பார்த்தீங்கன்னாலே, செய்தி வேற கருத்து வேற அப்படிங்கறது உங்க எல்லாத்துக்கும் தெரியவரும்.


நிறைய சோசியல் மீடியால நல்லவர்களை கெட்டவங்களாகவும், கெட்டவர்களை நல்லவர்களாவும் ப்ரொஜெக்ட் பண்ணுவாங்க. அதை எல்லாத்தையும் பாருங்க அதை எல்லாத்தையும் அனலைஸ் பண்ண கத்துக்கோங்க. அப்பதான் உண்மையிலேயே நம்ம நாட்டில் என்ன பிரச்சனை.. நாட்டு மக்களுக்கு என்ன பிரச்சினை.. சமூகப் பிரச்சினைகளில்  நன்மைகள், தீமைகள் பற்றி தெரிய வரும். அதை தெரிஞ்சிக்கிட்டாவே ஒரு சில அரசியல் கட்சிகள் செய்யும் பொய்யான பிரச்சாரங்களை எல்லாம் நம்பாமல் எது கரெக்ட்டு, எது தப்பு.. உண்மை எது, பொய் எது..அப்படின்னு அனலைஸ் பண்ணி பாத்துட்டு நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கிற  விசாலமான பார்வையை உங்களால் வளர்த்துக் கொள்ள முடியும். 


நல்ல நண்பர்கள் தேவை




இது வந்துட்டாலே அதைவிட சிறந்த அரசியல் வேற எதுவுமே இருக்க முடியாது. அதை விட நம்ம நாட்டு வளர்ச்சிக்கு நீங்க செய்கிற பங்களிப்பு வேற எதுவுமே இருக்க முடியாது. கடைசியா ஒரு சின்ன விஷயம் நண்பர்கள் நமக்கு மிகவும் அவசியம். ஒரு கட்டத்துக்கு மேல் பெற்றவர்களை விட நண்பர்களிடம் தான் அதிக நேரத்தை செலவிடும் ஒரு சூழ்நிலை ஏற்படும். அதனால் நல்ல நண்பரே தேர்ந்தெடுங்கள். 


உங்க நட்பு வட்டாரத்துல ஏதோ ஒரு விஷயம் தப்பா இருக்கு அப்படின்னா.. ஒரு சிலர் ஏதாவது ஒரு தவறான பழக்கத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என்றால்.. முடிஞ்சா அவர்களை நல்வழிப்படுத்த பாருங்கள்.. அந்த தவறான வழிகளில் மட்டும் ஈடுபடாதீர்கள். ஈடுபடக்கூடாது. உங்களுடைய அடையாளத்தை எக்காரணத்தைக் கொண்டும் இழந்திராதீர்கள். 


உங்க அடையாளத்தை இழந்துடாதீங்க




Don't lose your identity at any cost இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால் தமிழ்நாட்டுல  போதைப்பொருள் பயன்பாடு அதிகமாகிவிட்டது. குறிப்பா இளைஞர்கள் மத்தியில் அதிகமாகி விட்டது. ஒரு பெற்றோர் என்ற முறையில், ஒரு அரசியல் இயக்கத்திற்கு தலைவர் என்ற இந்த முறையில், எனக்கும் அச்சமாக உள்ளது. 


இந்த போதைப் பொருள்கள் எல்லாம் கண்ட்ரோல் பண்ணுவது அரசுடைய கடமை என சொல்லலாம். இளைஞர்களை இதிலிருந்து காப்பாற்றுவது அரசுடைய கடமை. இப்ப ஆளும் அரசு அதெல்லாம் தவற விட்டுட்டாங்க. அப்படிங்கறத பத்தி எல்லாம் நான் பேச வரல. சில நேரம் அரசாங்கத்தை விட நம்ம வாழ்க்கையை நாம் தான் பாதுகாக்க வேண்டும். நம்முடைய பாதுகாப்பை நம்ம தான் பாக்கணும். உங்களுடைய செல்ஃப் கண்ட்ரோல் உங்களுடைய டிசிப்ளீன நீங்க தான் வளர்த்துக்கணும். say no to temporary Pleasure.. say no to drugs என நீங்க எல்லோரும் உறுதிமொழி எடுக்கணும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார் விஜய்.

சமீபத்திய செய்திகள்

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

news

தமிழாசிரியர் பணி.. இந்தி, சமஸ்கிருதம் எப்படி விரும்பத்தக்க தகுதியாக முடியும்?... சு.வெங்கடேசன்

news

என்னா சேட்டை பாருங்க.. சத்துணவு முட்டையை வைத்து ஆம்லேட் போட்ட திருச்சி ஹோட்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்